பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 திருவாசகம் சில சிந்தனைகள்-5 ஆனால், அப்பாவியாகிய யசோதையால் கண்ணனின் இந்தத் திருவிளையாடலைப் புரிந்துகொள்ள முடியவில்லை. திருப்பெருந்துறையில் திருவடி தீட்சை பெற்ற காரணத்தால் திருவருளாகிய நுண்ணோக்காடி தம்மிடம் இருப்பதை அடிகளார் நன்கு அறிந்திருந்தார். அதனாலேயே கூத்தன் கூத்தை எனக்கு அறியும் வண்ணம் அருளியவாறு’ என்று பாடுகிறார். 652. பொய் எல்லாம் மெய் என்று புணர் முலையார் போகத்தே மையல் உறக் கடவேனை மாளாமே காத்தருளித் தையல் இடம் கொண்ட பிரான் தன் கழலே சேரும்வண்ணம் ஐயன் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே 3 தையலார் மையலில் மயங்கியிருந்த தம்மை, கருணையுடையவனாகிய கூத்தன், இந்த மயக்கத்திலிருந்து விடுபட்டுத் தன் திருவடிைைய அடையுமாறு அருளினான் என்க. 653. மண் அதனில் பிறந்து எய்த்து மாண்டு விழக் கடவேனை எண்ணம் இலா அன்பு அருளி எனை ஆண்டிட்டு என்னையும் தன் சுண்ண வெண் நீறு அணிவித்துத் து நெறியே சேரும்வண்ணம் அண்ணல் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே 4 இப்பாடலில் உள்ள எண்ணம் இலா அன்பு அருளி' என்ற தொடர் சிந்தனைக்குரியதாகும். அளவுக்குட்படாத அன்பை எனக்கு அருளிச் செய்தான் என்றே பலரும் பொருள்கூறியுள்ளனர். அதாவது அளவுபடாத கருணையைத் தன்பால் பொழிந்தான் என்ற