பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 திருவாசகம் சில சிந்தனைகள்-5 'இருவினையை ஈடழித்து என்பதிலேயே சஞ்சித வினை அடங்காதோ எனின், இந்தப் பிறவியில் அனுபவிக்கப்படும் பிராரத்துவ வினைபோன்றதன்று சஞ்சிதம், குறிப்பிட்ட காலத்தில் ஏதோ ஒரு பிறவியில் வந்து தொழிற்பட வேண்டும் என்ற நியமத்துடன் வைக்கப்பட்ட வைப்பு நிதியாகும் சஞ்சிதம். இது அவ்வளவு எளிதாகப் போக்கி விடக்கூடிய ஒன்றன்று என்பதைக் கூறவந்த திருமூலர், முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள் பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள் (திருமந்திரம்:2550) என்றல்லவா கூறியுள்ளார். பின்னை வினையாகிய பிராரத்துவ, ஆகாமியங்களைப் பிசைந்து எறியக்கூடிய பேராற்றல் பெற்ற மகான்கள்கூடச் சஞ்சிதத்தை உரிய காலத்தில் மெள்ளமெள்ளத்தான் அனுபவித்துக் கழிக்கின்றனர். இந்தக் கருத்தைத்தான் 'முடிச்சை அவிழ்ப்பர்கள்’ என்ற தொடரால் திருமூலர் குறிக்கின்றார். இந்தச் சஞ்சித வினை போக, அஞ்ஞானம் என்ற ஒன்றும் ஆன்மாவைப் பற்றிக்கொண்டு, பிறவிதோறும் தொடர்கின்றது. ஆதலின் அதனையும் குருநாதர் அழித்தார் என்ற கருத்தையே முன்புள்ளவற்றை முழுது அழிய என்ற தொடரால் அடிகளார் குறிப்பிடுகின்றார். இப்பாட்டில் கூறப்பெற்றவற்றுள் இருவினையை ஈடு அழித்து' என்பது தொடங்கி முழுது அழிய' என்பது வரையுள்ள செயல்கள் உள்ளே புகுந்த குலாத் தில்லை ஆண்டான் செய்த செயல்களாகும். இத்தனை எதிர்மறைச் செயல்களைச் செய்தான் என்றுமட்டும் கூறிவிட்டால் குலாத் தில்லை ஆண்டானின் அருள்திறத்தில் எதிர்மறைப் பகுதியைமட்டும் குறிப்பதாக ஆகிவிடும். அத்தோடுமட்டும் அவன்