பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அச்சோப் பதிகம் 9 161 பொருளிலேயே அன்பு என்ற சொல் பயன்படுத்தப் பட்டிருப்பதாக இவர்கள் நினைந்தனர் போலும். உயிர்கள் மாட்டு இறைவன் பொழிகின்ற கருணையை அன்பு என்ற சொல்லால் குறிக்கும் மரபு இல்லை. எனவே, இத் தொடருக்குக் கவனத்துடன் பொருள் கொள்ள வேண்டும். எல்லா உயிர்கள்மாட்டும் செல்லக்கூடியது ஆகிய பேரன்பு, கல்போன்ற என்னுள்ளத்தில் தோன்றி வளர்ந்து பெருகுமாறு செய்தான் என்பதே இதன் பொருளாகும். 'எண்ணம் இலா డTడకడ? ஆண்டிட்டு எனக்கொண்டுகட்டுச் செய்து, அவன் திருவடிகளில் சேரவேண்டுமென்ற எண்ணம் ஒரு சிறிதும் இல்லாத என்னையும் ஆட்கொண்டு எனப்பொருளுரைக்க, 'எனை ஆண்டிட்டு' என்பது அடுத்து நிற்கும் தொடராகும். அவன் ஆட்கொள்ள வேண்டுமானால் அதற்குரிய தகுதி என்மாட்டு இருந்திருக்கவேண்டுமே! முன்னர் அது என்பால் இல்லை. ஆகவேதான், அந்த அன்பு பொங்கி வழியுமாறு முதலில் செய்தான், அதன் பின்னர் என்னை ஆட்கொண்டான் என்றபடி 654. பஞ்சு ஆய அடி மடவார் கடைக் கண்ணால் இடர்ப்பட்டு நெஞ்சு ஆய துயர் கூர நிற்பேன் உன் அருள் பெற்றேன் உய்ஞ்சேன் நான் உடையானே அடியேனை வருக என்று அஞ்சேல் என்று அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே 5 'பஞ்சு ஆய அடி மடவார் வலையில் அகப்பட்டு உய்கதி அடையும் வழி தெரியாமல் துயரம் என்னை ஆட்கொள்ள, பரிதாபமாக நின்றிருந்தேன். அப்படிப்பட்ட என்னை 'அஞ்சேல்! வருக!' என்று அழைத்து என் துயர் துடைத்தாய். அதன் பயனாக உய்ந்தேன் (உய்ஞ்சேன்) நான் என்றவாறு.