பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162-திருவாசகம் சில சிந்தனைகள்-5 தஞ்சே கண்டேன் தரிக்கிலாது ஆர் என்றேன் அஞ்சேல் உன்னை அழைக்க வந்தேன் என்றார் உயஞ்சேன் என்று உகந்தே எழுந்து ஒட்டந்தேன் வஞ்சேர் வல்லரே வாய்மூர் அடிகளே (திருமுறை:5-50-3) என்ற நாவரசர் பாடல் ஒப்புநோக்கத்தக்கது. 655, வெந்து விழும் உடல் பிறவி மெய் என்று வினை பெருக்கிக் கொந்து குழல் கோல் வளையார் குவி முலைமேல் விழுவேனைப் பந்தம் அறுத்து எனை ஆண்டு பரிசு அற என் துரிசும் அறுத்து அந்தம் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே 6 'உடலை மெய்யென்று கருதி, தையலார் மையலில் கிடந்து தீவினையைப் பெருக்கிக்கொண்டிருந்த என்னுடைய இயல்பான பந்தங்களைப் போக்கினான். 'உயிரைப் பற்றிநின்ற தன்மைகள் (பரிசு) அற்றுப் போகும்படியாகச் செய்தான். இதனிடையே (பெரும் பதவியில் இருந்த நான் தெரிந்தோ தெரியாமலோ பல குற்றங்களைச் (துரிக) செய்துள்ளேன். ஆதலின் அவற்றையெல்லாம் போக்கினான்’ என்கிறார். சங்கிலித் தொடர்போன்ற பிறவிக்கு ஒரு முடிவைத் தந்தான். இக்கருத்தை மீடு வாரா வழியருள் புரிபவன்” (2:17) என்று முன்னரும் கூறியுள்ளமை காண்க ஆண்டதும், பரிசு அறுத்ததும் துரிசு அறுத்ததும் பந்தம் அறுத்ததும் ஆகிய அனைத்தும் அவன் அருள்செய்த அதே கணத்தில் உடன்நிகழ் செயல்களாக ஒரே விநாடியில் நிகழ்ந்தேறின என்கிறார்.