பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அச்சோப் பதிகம் 0_163 656. தையலார் மையலிலே தாழ்ந்து விழக் கடவேனை பையவே கொடு போந்து பாசம் எனும் தாழ் உருவி உய்யும் நெறி காட்டுவித்திட்டு ஓங்காரத்து உட்பொருளை ஐயன் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே 7 “பாசம் எனும் தாழ் உருவி” என்பது, உயிரை இயல்பாகப் பற்றிநிற்கும் பாசம் என்ற பூட்டைத் திறந்து என்ற பொருளைத் தரும். "ஓங்காரத்து உட்பொருளை ஐயன் எனக்கு அருளியவாறு என்பது புதிய முறையில் சிந்திக்கத் துண்டுகிறது. வேதத்தில் காணப்படாத இந்த 'ஓம்' என்பது பிற்காலத்தில் பெருவழக்காய் வடமொழி, தமிழ்மொழி என்ற இரண்டிலும் இடம் பெற்றுவிட்டது. அடிகளார் காலத்தில், அதாவது ஒன்பதாம் நூற்றாண்டில், நன்கு வழங்கப்பெற்ற இந்த 'ஓம் பல பொருள்களையுடைய ஒரு சொல்லாக வழங்கிற்று. அடிகளாரும் திருவாசகத்தில் இரண்டு இடங்களில் இதனைப் பயன்படுத்துகிறார். 'உய்ய என் உள்ளத்தில் ஓங்காரமாய் நின்ற மெய்யா'(1.33,34) என்று திருவாசகத்தின் தொடக்கப் A HITE_ojff to அமைக்கப்பெற்றுள்ள சிவபுராணத்திலும், ஒங்காரத்து உட்பொருளை ஐயன் எனக்கு அருளியவாறு’ என்று திருவாசகத்தின் நிறைவுப் பதிகமான இதிலும் பயன்படுத்தியுள்ளமை ஆயத்தக்கது. உள்ளத்தில் ஓங்காரமாய் நின்றான் என்று முன்னர்க் கூறிய அடிகளார், இப்பொழுது ஓங்காரத்து உட்பொருளை எனக்கு அருளி என்று பாடுகிறார். 'ஓம்' என்ற ஒலி ஆதி நாதத்தின் அடையாள ஒலியாகும். பிரபஞ்சம் தோன்றுவதற்கு ஆதி காரணமாய் உள்ளது ஒலியே என்பதை நம் முன்னோர் என்றோ கண்டு