பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 திருவாசகம் சில சிந்தனைகள்-3 கூறினர். இடைக்காலத்தில் தோன்றிய மேலைநாட்டு வானநூலாரும் இக்கருத்தை முற்றிலுமாக ஏற்றுக்கொண்டு, அதற்கு மிகப்பெரிய சப்தக் கொள்கை'(big-bang theory) என்று பெயரிட்டனர். இவ்வளவு பெரிய தத்துவத்தை நம் முன்னோர் தோற்றம் துடி அதனில் (உண்மை விளக்கம்: 36) என்று கூறிப்போயினர். அதற்கு அடையாளமாகக் கூத்தனின் வலக்கரத்தில் உடுக்கை துடி) இருப்பதாகக் காட்டினர். இனி, இந்த ஆதி நாதத்திற்கு இரண்டு இயல்புகள் உண்டு. ஒலிவடிவாக அமைந்திருப்பது ஒர் இயல்பு. இந்த ஒலிக்கு ஒர் உட்பொருளும் உண்டு. அது இரண்டாவது இயல்பு. அடிகளார் போன்ற அருளாளர்கள்மட்டுமே இந்த இரண்டையும் அறியமுடியும், சிவபுராணத்தில் ஒலிவடிவாக உள்ளே நின்றான் என்று கூறியவர், அச்சோப் பதிகத்தில் அதன் உட்பொருளை விளக்கினான் என்று கூறுகிறார். மணிவாசகர் என்ற அருளாளரின் வாழ்க்கையில் இரண்டு நிலைகளைக் குறிப்பதாகும் இத்தொடர்கள். இவை இரண்டையும் சேர்த்தே நாத தரிசனம் என்று கூறுவர். ‘என்னுள் எழு பரஞ்சோதி” 8ே8) என்று கூறியதால் சோதி தரிசனமும் ஓங்காரமாய் நின்ற (1.33) என்றதால் நாத தரிசனமும் தொடக்கத்திலேயே இவருக்குக் கிட்டியது என்பதையும், அச்சோப் பதிகம் பாடுகின்ற காலத்தில் நாதத்தின் உட்பொருளையும் அறியமுடிந்தது என்பதையும் அடிகளாரே கூறியுள்ளார். திருவாதவூரர் என்ற சராசரி மனிதர் மணிவாசகரென்ற அருளாளராக மாறி வளர்ந்த வளர்ச்சியை அவருடைய கூற்றாகவே காணும் வாய்ப்பினை மேலே காட்டிய தொடர்கள் அறிவிக்கின்றன. .