பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

eläosinů ušlaith o 165 657. சாதல் பிறப்பு என்னும் தடம் சுழியில் தடுமாறிக் காதலின் மிக்கு அணி இழையார் கலவியிலே விழுவேனை மாது ஒரு கூறு உடைய பிரான் தன் கழலே சேரும் வண்ணம் ஆதி எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே 8 இறப்பும் பிறப்புமாகிய சுழியில் சிக்கித் தடுமாறி, பெண்கள் சுகத்தில் காதல் கொண்டு திரிந்த என்னை, ஆதிப்பிரானாகிய கூத்தன் தன் கழல் சேரும் வழியருளினான் என்றபடி 658. செம்மை நலம் அறியாத சிதடரொடும் திரிவேனை மும்மை மலம் அறுவித்து முதல் ஆய முதல்வன்தான் நம்மையும் ஓர் பொருள் ஆக்கி நாய் சிவிகை ஏற்றுவித்த அம்மை எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே 9 சிதடர் குருடர் இப்பாடலின் நான்காவது அடி இந்த அச்சோப் பதிகத்தின் முடிமணியாகும். திருவாசகத்தின் முடிமணி அச்சோப் பதிகம் என்று முன்னர்க் கூறினோம். திருவாசகத்தின் இறுதிப் பதிகத்தின் இன்றுள்ள முறையில் இறுதிப் பாடலின், இறுதியாகவுள்ள மூன்றாம் நான்காம் அடிகள் துன்புற்று அலமந்து செல்கதி அறியாது நொந்துபோய் இருக்கின்ற மனித சமுதாயத்திற்கு (சைவர்களுக்குமட்டு மன்றி, மாபெரும் நம்பிக்கையை ஊட்டி நிமிர்ந்து நிற்கச் செய்யும் சத்து மருந்து (tonic) போன்று அமைந்துள்ளன. சராசரி மனிதராக இருந்த திருவாதவூரருக்கு இந்த அரும் பெரும் நிலை கிட்டியது ஆதலால், தம்முடைய பழைய வாழ்க்கையைத் திரும்பிப்பார்த்த அடிகளார், இப்போது இருக்கும் நிலையையும் அதனோடு ஒப்பிட்டு,