பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 திருவாசகம் சில சிந்தனைகள் 5 ‘நாய் சிவிகை ஏற்றுவித்த’ என்ற தொடரால் அதனை விளக்குகிறார். நாயைச் சிவிகையில் ஒருவன் ஏற்றினான் என்றால் அதற்கு இரண்டே காரணங்கள் இருத்தல் கூடும். ஒன்று சிவிகையில் ஏறும் அளவிற்கு நாய் சிறப்புப் பெற்று உயர்ந்திருத்தல் வேண்டும். இன்றேல் நாய்க்கு உரியவன் அதன்மாட்டுக் கொண்ட எல்லையற்ற கருணை காரணமாக அந்த நாயைச் சிவிகையில் ஏற்றியிருக்கவேண்டும். இந்த அடிப்படையை மனத்துட் கொண்டு பார்த்தால், தம்மை நாயென்று உருவகித்த அடிகளார் எந்த விதத்திலும் அந்த நாய் சிறப்புப் பெறவில்லை என்பதைச் 'செம்மைநலம் அறியாத சிதடரொடும் திரிவேனை' என்ற தொடரால் விளங்கவைக்கிறார். அப்படியானால் நாயைச் சிவிகையில் ஏற்றியதற்குக் காரணம் இரண்டாவதாகச் சொல்லப்பட்ட ஏற்றியவனின் கருணையேயாக இருக்கவேண்டும். இந்தக் கருனைதானும் தராதரம் பார்த்து வருவதன்று என்பதை அறிவிக்கவே நாய் சிவிகை ஏற்றுவித்த அம்மை’ என்று கூறுகிறார். தாய்க்கு, தராதரம் பார்க்கும் இயல்பில்லை ஆதலால் தராதரம் பாராது கருணை செய்த இறைவனை அம்மை என்றார். திருவாசகத்தில் பெரும்பாலும் அம்மையப்பன் என்றும் அப்பன் என்றும் தலைவன் என்றும் ஆண்பால் முடிவு கொடுத்தே இறைவனைக் கூறும் மரபைக் காணலாம். இந்தப் பாடலில் முதல்வன் தான் என்று தொடங்கியவர் பாடலின் முடிவில் இந்த ஆண்பால் இயல்பை முற்றிலும் விட்டு அம்மை’ என்றே இறைவனைக் குறிப்பிட்டார். பாலுணர்வால் உந்தப்பெற்று Líso) மகளிரின் தொடர்புகொண்டிருந்த பழைய வாழ்க்கையை நினைந்து பாடுதல் இந்நூலில் பலபாடல்களில் இடம்பெற்றுள்ளது.