பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அச்சோப்-பதிகம்-167 பாலுணர்வில் மிகுந்து செல்லும் ஒருவனை அவன் தந்தை மிகுதியாகக் கடிவானே தவிர, எளிதாக அவனை மன்னித்துவிடமாட்டான். அப்படியே மன்னித்தாலும் மன்னிக்கப்பட்டவனுக்கு எவ்வித நலத்தையும் செய்ய ஒருப்படான். இது பொது நியதி. இவ்வாறிருக்க, முதலிரண்டு அடிகளில் பாலுணர்வு மிகுதியால் தாம் முன்னர் வாழ்ந்த வாழ்க்கையைக் குறிப்பிடும் அடிகள்ார் பெருந்துறைநாயகன் தம்மை மன்னித்து ஆட்கொண்டான் என்று பாடுவதைக் காணலாம். இவ்வாறு வரும் பாடல்களையெல்லாம் ஒன்றாக வைத்துப் பார்த்தால், ஒரு புதுமையைக் காணமுடியும். இம்முறையில் வரும் பல பாடல்களிலும் மூன்று அல்லது நான்காவது அடிகளில் பெருந்துறை நாயகன் பேசப்பெறுகிறான். அவ்வாறு வரும் இடங்களிலெல்லாம் பெருந்துறை நாயகன் இறைவன்' என்று மட்டும் கூறாமல் தையல் இடம் கொண்ட பிரான்' (652), 'மாதொடு கூறுடைய பிரான்” (657), மான் அன்ன நோக்கிதன் பங்க (413) என்றெல்லாம் பாடுதலைக் காணலாம். இதிலென்ன புதுமை என்று கேட்கிறீர்களா? மகளிர் வலையில் அகப்பட்ட ஒருவனைக் காக்க வருபவன் நோக்கி தன் பங்கனாகவும், மாதை ஒரு கூறுடையவனாகவும் கூறப்படுவது ஏன்? இறைவியின் தொடர்பு இல்லாமல் தனியே இறைவனைப்பற்றிப் பாடமுடியாதா? நன்றாகப் பாடலாம். நூற்றுக்கணக்கான இடங்களில் அப்படியே பாடியும் உள்ளார். அப்படியிருக்க, பாலுணர்வோடு தம்மைத் தொடர்பு படுத்திப் பாடும் பாடல்களில் மட்டும் இறைவியோடு கூடிய இறைவனை முன்னிலைப்படுத்துவதின் நோக்கமென்ன? சற்றுச் சிந்தித்தால் இதன் அடிப்படை நன்கு விளங்கி விடும். பாலுணர்வில் மிகத் தாழ்ந்த நிலையில் இருந்த தம்மை, தந்தையாக மட்டும் அவன் இருந்திருந்தால்,