பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 திருவாசகம் சில சிந்தனைகள்-5 மன்னித்திருப்பானா என்பது ஐயத்திற்குரியது. பின்னர் ஏன் மன்னித்தான்? பிள்ளைகள் செய்யும் தவறு தாய்மை என்னும் அன்புக் கண்ணாடி போட்டுள்ள தாய்க்குத் தெரியாது. எந்தத் தவற்றைச் சுட்டிக் காட்டினாலும் தாய் அதற்கு ஒரு சமாதானம் சொல்லிவிடுவாள். அப்படிப்பட்ட தாய், தந்தையின் ஒரு பாகமாக அமர்ந்திருக்கிறாள். தந்தை தம்மை மன்னித்தற்கு ஒரே காரணம் தாயின் தூண்டுதல்தான் என்பதை நினைவூட்டத்தான் இப்பகுதிப் பாடல்களிலெல்லாம் இறைவியை இடப்பாகத்தே உடைய இறைவன் என்று விடாமல் பாடிச் செல்கிறார். இந்த அடிப்படையை மனத்துட்கொண்டு பார்த்தால், அச்சோப்பதிகத்தில் மற்றொரு புதுமையையும் காணமுடியும். இப்பகுதியிலுள்ள ஒன்பது பாடல்களில் ஏழு பாடல்களில் தமது அதீதமான பாலுணர்வைச் சுட்டிப் பாடும் அடிகளார், ஒவ்வொரு பாடலிலும் தம்மை மன்னித்து ஆட்கொண்ட இறைவனைக் குறிக்கும்பொழுது அன்னையோடு தொடர்புபடுத்தியே பாடுகிறார். தம்முடைய மலைபோன்ற தவறுகள் அவருடைய உள்ளத்திடையே படம்போன்று ஒடுகிறது. உடனடியாகவே இவ்வளவையும் மன்னித்துத் தம்மை ஆட்கொண்ட இறைவன்பற்றிய உணர்வு தோன்றகிறது. அந்நினைவு வந்தவுடன் அன்னையோடு தொடர்புடையவன் அவன் என்ற எண்ணம் அவர் மனத்தில் ஆழமாகப் பதிகிறது. பாடல்கள் செல்லச் செல்ல மன்னித்தற்குக் காரணமாக இருந்த அவனுடைய நினவைவிட, மன்னிக்குமாறு அவளைத் துரண்டிய தாயின் நினைவு ஆழமாக மனத்தில் பதிகின்றது. ஒன்பதாவது பாடல் வரும்பொழுது அத்தலைவன் மறைந்துவிடுகிறான். அந்த இடத்தில் அன்னை மட்டும் காட்சியளிக்கிறாள். கடைசிப்பாட்டின் கடைசி அடிக்கு வரும்பொழுது இறைவனின் இடப்பாகத்தில் ஒரு கூறாக இருந்த அன்னை, இப்பொழுது விஸ்வரூபம் எடுத்து இறைவனையே தன்னுள் அடக்கிக்