பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அச்சோப் பதிகம் 0_169 கொள்கிறாள். இப்பொழுது அடிகளாரின் மனத்திரையில் இறைவனோ உமையொருபாகனோ காட்சி தரவில்லை. பின்னர் யார் காட்சி தந்தார்? விஸ்வரூபம் எடுத்த அன்னையே காட்சி தருகிறாள். பாடலின் இரண்டாம் அடியில் முதலாய முதல்வன்' என்று பாடியவர், இந்த விஸ்வரூபக் காட்சியில் மூழ்கி, ‘அம்மையே.அப்பா என்று கூடப் பாடாமல் 'அம்மை எனக்கு அருளியவாறு’ என்று பாடுகிறார். இதிலும் ஒரு வளர்ச்சி முறையைக் காணமுடிகிறது. 'தாயிற் சிறந்த தயாவான தத்துவனே’ (1-5) என்று சிவபுராணத்தில் பாடியவர், இப்பொழுது தந்தையினும் சிறந்தவர் தாய் என்றுணர்ந்து 'அம்மை எனக் கருளியவாறு’ என்று பாடுகிறார். 'செம்மைநலம் அறியாத சிதடர்’ என்ற தொகுதியில் அருளாளர்கள் தவிர, உலகில் வாழும் மக்கள் அனைவரும் அடங்குவர். இந்தக் கூட்டத்தாருக்குப் பிரதிநிதியாக இருக்கும் தன்மையைத் தம்மேல் ஏறட்டுக்கொண்டு, இப்படி இருந்தாலும், கவலைப்படத் தேவையில்லை; தாய்த்தன்மையுடைய கூத்தன் தன்னுடைய கருணையாகிய சிவிகையில் தம்மை ஏற்றுவிப்பான் என்று பாடியுள்ளமை கற்றுக் கற்றுத் தெளிவடைய வேண்டிய பகுதியாகும். திருவாசகத்தில் L!☾ பாடல்கள் காணாமல் போய்விட்டதுபோல, பிற பகுதிகளும் காணாமல் போய்விட்டாலும், அச்சோப் பதிகமும், இந்த இறுதிப் பாடலும் நிலைபெற்றிருக்குமாயின் நம் போன்று நொந்தவர்களுக்குக் கலங்கரை விளக்கமாக நம்பிக்கை நட்சத்திரமாக உலகம் உள்ளவரை நிற்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ويني ওঁ ওঁ ওঁ6