பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குலாப் பத்து 9 விட்டுவிட்டிருப்பானேயான்ால், அவனால் அழிக்கப்பட்ட இவை மறுபடியும் புறப்பட்ட இடத்தில் புகுந்துவிடும். எனவே, எதிர்மறை முறையில் இவற்றைப் போக்கிய ஆண்டான் இவை மீட்டும் உள்ளே நுழையாதிருக்க, உடன்பாட்டு முகத்தாலும் ஒன்றைச் செய்தான். அதுவே என்பு உள் உருகச் செய்த செயலாகும். இருவினையை ஈடு அழித்தல், துன்பம் களைதல், துவந்துவங்கள் தூய்மை செய்தல், முன்பு உள்ளவற்றை முழுது அழித்தல் ஆகிய நான்கு செயல்களை எதிர்மறையாகச் செய்துவிட்டு இதற்கு இணையாக எலும்பு உள்ளுருகுதல் ஒன்றைமட்டும்தானே செய்தான்! இது போதுமா என்ற வினாத் தோன்றுமேயாயின் என்பு உருக்கி என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்றே சொல்ல நேரிடும். . என்பு உருகுதல்’ ஒன்று; என்பு "உள் உருகுதல் வேறு, இந்த இரண்டாவது நிலை ஏற்படும்போது நம் போன்றவர்கள் அறியமுடியாத ஒன்று நிகழ்ந்துவிட்டது என்பதையே அது குறிக்கும். அது என்னவென்றால். இந்த நான்கையும் செய்தவன் உள்ளே புகுந்து முழுவதுமாக ஒருவரை ஆட்கொண்டுவிட்டான் என்பதையே அது குறிக்கும். என்பு உள் உருகுதல் ஆகிய காரியம் நிகழவேண்டுமே யானால், இதனைச் செய்யக்கூடியவன் முன்னரே, உள்ளே புகுந்து நிறைந்துவிட்டான் என்ற காரணத்தை அறிதல் வேண்டும். - ... " எவ்வளவு முயன்று பற்றை நீக்கினாலும் அது இருந்த இடத்தில் மீண்டும் மீண்டும் தோன்றும். ஆதலின் இதனை அறுதியாக அழிக்கவேண்டுமானால் அது இருந்த இடத்தைத் தூய்மை செய்தல் வேண்டும். இக்காலத்தார் இதனை "வேரோடு களைதல்’ என்று கூறாமல்