பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை_171 என்றாலும், மனம் ஏதோ ஒரு பொறியுடன் இணையும்போது மற்றைப் பொறிகள் செயலிழந்து விடுகின்றன. மனித உடலுடன் இருக்கின்ற வரையில் இதுவே பொதுவான நியாயமாகும். 'ஐந்துபேர் அறிவும் கண்களே கொள்ள (பெ.புதடு. ஆட்:06) என்று சேக்கிழார் பாடுவதும் இக்கருத்தை வலியுறுத்துவதாகும். இந்த உடம்போடு இருப்பினும் இறையனுபவம் கைகூடிவிட்டால் மேலே கூறிய முறை அடிபட்டுப் போய்விடுகிறது. ஐந்து பொறிகளும் மன்த்தின் உதவி இல்லாமலேயே இன்பத்தை அனுபவிக்கின்றன. ஐந்தும் ஒன்றுசேர்ந்து ஒரே நேரத்தில், ஒரே இன்பத்தைப் பங்கு கொள்ளும் இந்த நிலையைத்தான் கூடும் உயிரும் குமண்டையிட என்கிறார் அடிகளார். இதிலும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. பொறி, புலன்கள் மனத்தின் உதவி கொண்டு எவ்வளவு உலக இன்பத்தை அனுபவித்தாலும் உயிர் உடம்புடன் இணைந்திருக்கும் பொழுதுதான் பரு உடலாயினும், சூக்கும உடலாயினும் இந்தப் பொறி, புலன்கள் இன்பத்தை அனுபவிக்க முடிகிறது. ஆனால், உயிர் தனித்து அதில் ஈடுபடுவதில்லை. உயிர், இன்பத்தை அனுபவிக்கிறது என்றால் அந்த இன்பம் இறையனுபவமாக இருக்க வேண்டுமே தவிரப் பொறி புலன் சம்பந்தப்பட்ட உலக இன்பமாக இருத்தல் இயலாது. எனவே, அடிகளார் கூடும் உயிரும் குமண்டையிட: என்று பாடினார் என்றால், அது இறையனுபவத்தில் திளைத்ததைக் கூறுகிறதே தவிர, வேறு எதனையும் குறிப்பிடவில்லை. தம் அனுபவ நிலையை மூன்றாவது அடியிற் கூறினாரேனும் அது கிடைப்பதற்குத் தேவையான படி நிலைகள் மூன்றை முதல் இரண்டு அடிகளில், படிப்படியாகக் கூறுகிறார். -