பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 திருவாசகம் சில சிந்தனைகள்: முதல் நிலை ஒடும் (பிட்சாபாத்திரம்) கவந்தியுமே கோவணம் உறவு என்றிருக்கும் நிலை, ஒடு, கவந்தி என்ற இரண்டுமே அஃறிணைப் பொருள்களாகும். அஃறிணைப் பொருள்களை உறவு என்று கொள்வது இயலாத காரியம், தன்னை ஒத்த மனிதர்களைத்தான் உறவினர் என்று கூறுவார்களே தவிர, மிக அன்போடு வளர்க்கும் நாயைக்கூட உறவு என்று யாரும் சொல்வதில்லை. அப்படியிருக்க, ஒடும், கவந்தியும் உறவு என்று சொல்வதின் நோக்கமென்ன? 'இணையார் திருவடி என்தலைமேல் வைத்தலுமே, துணையான சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன்' திருவாச 2:7-5) என்றும், உற்றாரை யான் வேண்டேன்’ (558) என்றும் பாடியுள்ளார். ஆதலின் சக மனிதர்களை உறவு என்று கொள்ளும் நிலையை அடிகளார் என்றோ கடந்துவிட்டார் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. இங்கு உறவு என்று அவர் கூறுவது, தம்மோடு தொடர்புடையது என்ற பொருளிலேயே ஆகும். ஒடும், கவந்தியும் அவரைவிட்டு நீங்காதிருத்தலின் அவற்றைத் தம் உறவு என்று கூறுகிறார். வேண்டின் உண்டாகத் துறக்க’ (342) என்ற குறளுக்கு இலக்கியமாக வாழும் நிலைதான் ஒட்டையும், கவந்தியையும் உறவாக நினைக்கும் நிலை. இது முதல் நிலையாம். மனம் ஏதாவதொரு பற்றுக்கோடின்றித் தனித்து இயங்கும் ஆற்றலுடையது அன்று. ஒரு பற்றை விடவேண்டுமானால் இன்னொரு பற்றைப் பற்றித்தான் ஆகவேண்டும் என்பதையே பற்றுவிடற்குப் பற்றுக பற்றற்றான் பற்றினை (குறள் 350) என்று வள்ளுவர் கூறுகிறார். ஆக, ஒட்டையும் கவந்தியையும்மட்டுமே உறவு என்று சொல்லுகின்ற அளவிற்கு, அகப்பற்று, புறப்பற்று ஆகிய இரண்டையும் அடிகளார் துறந்துவிட்டார் என்றால், அது எவ்வாறு, முடிந்தது? வேறு ஒன்றைப் பற்றிக் கொண்டார்; அதனால் மனத்திலுள்ள இப்பற்றுக்களைத்