பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை_13 துறக்க முடிந்தது. எதைப் பற்றிக்கொண்டார் என்பதை மூன்றாவது நிலையாகப் பாடல் அறிவிக்கின்றதேனும் அந்தப் பற்றை நாம் அறியமுடியாது. ஆதலால், அதை அறிவதற்குரிய ஓர் அடையாளத்தை இரண்டாவது நிலையாகப் பேசுகிறார் அடிகளார். அந்த இரண்டாவது நிலை உள்கசிகின்ற நிலையாகும். உள்ளந்தாள் நின்று உச்சி அளவும் நெஞ்சாய் உருகுதல் (25) என்பதுதான் உள் கசிகின்ற நிலை. உள் கசிவு ஏற்படுகின்ற அதே நேரத்தில் மனம் பற்றற்றான் பற்றினைப் பற்றிக்கொள்கிறது என்பதை அறிதல் வேண்டும். அதுவே தேடும் பொருளும் சிவன் கழலே எனத் தெளிந்த என்று சொல்லப்படும் மூன்றாவது நிலை. - இரண்டாவது பாடலில் (560) பொறி புல இன்பங்களில் தலைமையிடம் பெற்றுள்ள பால் உணர்வு பற்றிப் பேசுகிறார். தமிழர்கள் என்றுமே பெண் உறவை இழித்தோ, அது முன்னேற்றத்திற்குத் தடையென்று பழித்தோ கூறியதே இல்லை. அதனாலேயே இறைவனை உமையொருபாகன் என்றும், திருமாலைத் திருமங்கை உறை மார்பன் என்றும் கூறிப்போயினர். தமிழர்கள் வழிபடும் கடவுளர்களே பெண்ணோடு சேர்ந்துள்ளார்கள் என்றால், பெண்ணையோ அவள் தரும் இன்பத்தையோ பழித்துப் பேசுதல் எவ்வாறு முடியும்? இந்த நுணுக்கத்தைப் புரிந்துகொள்ளாத இடைக்காலப் போலி வேதாந்திகள் பெண்ணை இழித்துப் பேசினர். இந்த அடிப்படையை மனத்துட் கொண்டு இப்பாடலின் முதலிரண்டு அடிகளைக் காணல் வேண்டும். துடி ஏர் இடுகு இடைத் துரமொழியார் தோள் நசையால், செடி ஏறு தீமைகள் எத்தனையும் செய்திடினும் என்ற அடிகளில் 'நசை என்ற சொல்லும் தீமைகள் செய்திடினும் என்ற சொற்களும் சிந்திப்பதற்குரியன. -