பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176-திருவாசகம் சில சிந்தனைகள் 5 பற்று என்பது மனத்தில் இயல்பாக இருக்கின்ற ஒன்று. அதனைப் போக்குதல் இயலாது ஆதலின், அற்பமானதும் அழிகின்றதுமான பொருளிடத்துப் பற்று வைக்காமல் உயர்ந்த பொருளிடத்து அப்பற்றை மடைமாற்றம் செய்தலையே துவந்துவங்கள் தூய்மை செய்து' என்கிறார். துன்பம் களைதல் என்றவுடன் துன்பத்தை ஏதோ ஒரு மூட்டையைத் துக்கி அப்பாற் போடுவதுபோலப் போட்டுவிடுவது என்று நினைக்கின்றோம்; அது தவறு. துன்பம் என்பது தனிப்பட்ட பொருளன்று; அது ஒரு மனநிலை. துன்பத்தை உண்டாக்கும் பொருள் எதிரே இருக்கின்றபோதுகூட அதுபற்றித் துன்பப்படாமல் இருக்கும் மனநிலையே துன்பம் களைந்து' என்று சொல்லப்பட்டது. எனவே, நன்மை தீமை என்ற இரண்டிலும் ஈடுபடாமலும் ുfത ബ് நம்மைத் தாக்கவிடாமலும் இருப்பது சமதிருஷ்டி நிலை என்று சொல்லப்பெறும். இந்தச் சமதிருஷ்டி நிலை ஒருவனுக்கு வந்துவிட்டால் இருவினைகள் அவனை விட்டு நீங்கிவிடும். மேலே சொன்ன முறைப்படி இவை நடைபெற்றால் எஞ்சியிருக்கும் அன்பு காரணமாக உள்ளம் உருகிவிடும். அது மீதுர்ந்த நிலையில் எலும்புகள் மென்மைத் தன்மை அடையும். இதனையே என்பு உள் உருக்கி என்று கூறுகிறார். என்பு உள் உருகும் என்ற நான்காவது நிலை, ஏனைய மூன்று நிலைகளும் படிப்படியாக வளர்ந்து கடைசியாக ஏற்படுகின்ற ஒன்றாகும். இதனையடுத்து அடிகளார் சொல்வது முன்புள்ளவற்றை முழுதழிய' என்பதாகும். இருவினையை ஈடழித்து என்று சொல்லிவிட்ட பிறகு, இவ்வாறு சொன்னால் அதன் பொருளென்ன? மேலே கூறிய நான்கு நிலையில் இந்தப் பிறவி எடுத்தபின் நடைபெறுகின்றவற்றைக் கூறியுள்ளார் ஆயினும், இப்பிறவியின் முன்னர்த் தொகுத்து வைக்கப்பெற்றுள்ள