பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை * 179 முதற் கூட்டத்தாரிடம் இல்லாத மூன்றும் இரண்டாவது தொகுப்பினரிடம் நிறைந்துள்ளன. இப்படிப் பட்டவரிடையே இருப்பதையே இறைவன் விரும்புகிறான். அவர்களைவிட்டு அவன் பிரிவதே இல்லை என்பதைப் 'பிறிவு அரிய பெற்றியன்’ என்ற தொடரால் குறிப்பிடுகின்றார். . குறிக்கோள் முதலிய மூன்றைச் சொல்லி. இவற்றை உடையவர், இல்லாதவர் என்ற வேறுபாட்டையும் சொல்லி. இவற்றை உடையார் பக்கமே இறைவன் பிரியாமல் இருப்பான் என்று அடிகளார் கூறுகிறார். இந்த இரண்டு கூட்டத்தாரையும் எப்படி இனங்கண்டு கொள்வது? புறத்தோற்றத்தில் எவ்வித வேறுபாடும் இல்லாத இந்த இரண்டு கூட்டத்தாரையும் பிரித்துவைப்பது அவர்களுடைய மனநிலைதான். அதனையே அடிகளார் பிறியும் மனத்தார்’ என்ற தொடரால் எடுத்துக் காட்டுகிறார். இவ்வாறு கூறுவதன் நோக்கமென்ன? குறிக்கோள் முதலியவற்றை உடையவர்கள் ஏனையோரிடமிருந்து பிரிந்து காடு முதலியவற்றிற் சென்று தனித்து வாழ்பவர்களா என்றால், இல்லை என்பதே விடையாகும். ஒர் ஊர் என்று எடுத்துக்கொண்டால் அந்த ஊரில் மக்கள் நிறைந்து வாழ்கிறார்கள். அவர்களிடையே மேலே கூறிய இரு திறத்தாரும் உண்டு. குறிக்கோள் முதலியவற்றை உடையவர்கள், அது இல்லாதவர்களை விட்டுப் பிரிந்து சென்று தனியே வாழ்வதில்லை. அப்படியானால் இவர்களுடைய வேறுபாடு எங்கே தோன்றுகிறது? ஊர், வீடு என்ற முறையில் இரு திறத்தாரும் ஒன்றாயிருப்பினும், இரண்டாவது வகையினர் முதல் வகையினர் மனநிலையிலிருந்து பிரியும் மனத்தராய் உள்ளனர். முற்றிலும் வேறுபட்ட மனநிலையுடையவர்கள் எப்படி ஒன்றாக இருக்க முடிகிறது. தாமரை இலையும்,