பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 திருவாசகம் சில சிந்தனைகள்-5 வேரொடும், வேரடி மண்ணோடும் களைதல் வேண்டும் என்பர். - 562. குறியும் நெறியும் குணமும் இலாக் குழாங்கள் தமைப் பிறியும் மனத்தார் பிறிவு அரிய பெற்றியனைச் செறியும் கருத்தில் உருத்து அமுது ஆம் சிவ பதத்தை அறியும் குலாத் தில்லை ஆண்டானைக் கொண்டன்றே 4 முதல் இரண்டு அடிகளில் மனித மனத்தின் மிக இன்றியமையாத இயல்பு ஒன்று பேசப்பெறுகிறது. மனிதனைச் சமுதாயப் பிராணி (social animal) என்று மனவியலார் குறிப்பிடுவர். எந்த நிலையிலும் தம்மையொத்த மனிதர்களோடு கூடியிருத்தலையே ஒவ்வொரு மனிதனும் விரும்புவான். குழந்தைகள்கூடத் தம்மையொத்த குழந்தைகளோடு கூடியிருந்து விளையாடுவதையே பெரிதும் விரும்புகின்றன. அதிக வயதுடையவர்களும் தம்மை ஒத்தவர்களுடன் கூடியிருந்து கதைப்பதையே பெரிதும் விரும்புகின்றனர். சிறைத்தண்டனையில் தனியாக ஒர் அறைக்குள் அடைத்து வைக்கப்படும் தண்டனை மிகக் கொடியது என்று கூறுவர். தம்மை ஒத்தவர்களோடு கூடியிருப்பதுதான் மனிதனின் வேட்கையென்றால், எத்தகைய பண்புடையவர்களுடன் கூடியிருக்கவேண்டும் என்ற வினாத் தோன்றுமன்றே! இதனை நன்கு உணர்ந்த அடிகளார் ஒரு வகைப்பட்ட கூட்டத்தாரை மிக விரிவாக்ப் பேசுகிறார். அவர்கள் யார்? வாழ்க்கையில் ஒரு குறிக்கோள், கடைப்பிடிக்க வேண்டிய தூய்மையான வழி, முக்குணங்களுள் ஒன்றாகிய சத்துவகுணம் ஆகிய இவற்றுள், எதுவும் இல்லாத மக்கள் கூட்டம் உண்டு. இத்தகைய கூட்டத்தார் இறைவன் தம்முள் இருப்பதை உணர்வதில்லை. இக்கூட்டத்திலிருந்து பிரிந்து இவற்றின் மறுதலையான பண்பாடுகளோடு வாழும்