பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180-திருவாசகம் சில சிந்தனைகள்-5 தண்ணிரும் ஒன்றாகத்தானே உள்ளன. அந்த இலையில் தண்ணிர் என்றேனும் ஒட்டுவதுண்டா? அதுபோலத்தான் இவ்விரு திறத்தாரும். ஒரே வீட்டில் ஒன்றாயிருப்பினும் மனத்தால் வேறுபட்டவர்கள். வியாபாரத்தில் பெரும்பொருள் ஈட்டவேண்டும் என்ற ஒர் எண்ணம்தவிர வேறு எதுவும் இல்லாதவன் பரமதத்தன். அவன் மனைவியாகிய புனிதவதியார் குறி, நெறி, குணம் ஆகிய மூன்றும் உடையவர். என்றாலும், முற்றிலும் மனத்தால் மாறுபட்ட இவ்விருவரும் பல்லாண்டுகள் குடும்பம் நடத்தவில்லையா? இரண்டாவது பிரிவைச் சேர்ந்த அம்மையாரிடம் ‘பிறிவரிய பெற்றியனாக இறைவன் இருக்கவில்லையா? இதனையே அடிகளார் இப்பாடலில் குறிப்பிடுகின்றார். . 565 ஆம் பாடலில் வியப்பான செய்தியொன்றை அடிகளார். பேசுகின்றார். ஒரே திருவடி இருவருடைய தலைமேலும் பட்டது. என்ன வியப்பு இரண்டு மாறுபட்ட செயல்களைச் செய்தது. இராவணன் கயிலையைத் தூக்கியபொழுது, இறைவன் தன் திருவடியில் ஒரு பகுதியாகிய கட்டை விரலை அழுத்தினான். இராவணன் தோள் நெரிந்தது. அதே இறைவன் திருப்பெருந்துறையில் திருவாதவூரர் தலையில் அதே கட்டைவிரலை வைத்தான். அழுத்தக்கூட இல்லை. இங்கு அடிகளாரின் பசு பாசங்கள் நெரிந்தன. பசுபாசத்தை நெரிக்கும் ஆற்றல் திருவடிக்கு இருந்திருந்தும் அது ஏன் இராவணனுக்கு அவ்வாறு செய்யவில்லை? எல்லையற்ற ஆணவம் இராவணன் தலைகளில் நிறைந்திருந்தமையின் இறைவன் திருவடி நேரிடையாக அவன் தலையில் படும் பேறு கிட்டவில்லை. அடிகளாரைப் பொறுத்தமட்டில் திருவடி சம்பந்தம் நேரிடையாகக் கிடைத்தது. எனவே, இவர் பசு பாசம் ஒழிந்தது.