பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை_181 தில்லையைப் பற்றி இதுவரை எத்தனையோ பாடல்கள் பாடியிருப்பினும் கூத்தனின் சிலம்பொலிபற்றி முதன்முதலாக இப்பாடலில்தான் (565) குறிப்பிடுகின்றார். அதிர்தல் என்பது அதிர்ந்து ஒலியெழுப்புதல் என்ற பொருளைத் தரும். 'அதிர்க்கும்’ என்றதால் சிலம்பொலியை எழுப்பி, ஒரு சிலரைக் கேட்கவைக்கும் தில்லை ஆண்டான்' என்ற பொருளைத் தந்து நிற்கிறது. சிலம்பு எந்நேரமும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. அதில் தோன்றுகின்ற ஒலி இந்த உலகத்தில் ஒலியை நாம் அளவிடும் டெசிபல் (decibel) என்ற கணக்கிற்குள் வராதது. எனவே, நாம் அனைவரும் அதனைக் கேட்டல் இயலாத காரியம். ஐயனின் சிலம்பொலியைக் கேட்கவேண்டுமேயானால் இந்தப் பருவுடலின் கருவி கரணங்கள் மாறி, பதி கரணங்களாக ஆக வேண்டும். அப்பொழுதுதான் அந்தச் சிலம்பொலியைக் கேட்கமுடியும். 'அதிர்க்கும் குலாத்தில்லை என்று அடிகளார் கூறுவதால் இந்தச் சிலம்பொலியை அவர் கேட்டார் என்று தெரிகிறது. அப்படியானால் இந்தப் பருவுடலுக்குரிய பசு கரணங்களோடு இருக்கையில் கேட்டாரா? இல்லை, இக்கருவி கரணங்கள் பதி கரணங்களாக மாறியபின் கேட்டாரா என்ற வினாவை எழுப்புவதற்கு நமக்கு உரிமையில்லை என்பது தெளிவு. ஆனாலும், கருணை வள்ளலாகிய அடிகளார் நம்முடைய மனத்தில் தோன்றக்கூடிய இந்த ஐயத்தைத் தாமே சிந்தித்து அதற்கு விடை கூறுவார்போலப் பாடலின் மூன்றாவது அடியில் "கதிக்கும் பசுபாசம் ஒன்றும் இலோம். ஆதலால் அதிர்க்கும் சிலம்பொலியைக் கேட்டோம் என்று பாடுகிறார். - கதிக்கும் பசு பாசத்தைப் போக்கியவர்கள் அரசராக இருப்பினும் ஆண்டியாக இருப்பினும் அதிர்க்கும்’