பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 திருவாசகம் சில சிந்தனைகள் 5 சிலம்பொலியைக் கேட்கமுடியும் என்பதற்குச் சான்று அரசரான சேரமான் பெருமாளும் ஆண்டியான மணிவாசகரும் ஆவர். இருவரும் இந்தப் பூதவுடலுடன் இருக்கும்போதே தம்முடைய !-fஆர். கரணங்கள் பதிகரணங்களாக மாற்றப் பெற்றவர்கள். 566ஆம் பாடலில் ஐவரை அதாவது ஐந்து பொறிகளைக் கண்டகர் (கொடியவர்) என்று கூறுவதுடன், அவர்கள் செயல்களை 'வல் அரட்டை (கொடுமை விளைக்கும் குறும்பு) என்றும் கூறுகிறார். பொறிகளின் உண்மையான சொரூபம் இது என்றால், இவர்களை எவ்வாறு அடக்குவது? ஒவ்வொன்றாக அடக்கத் தொடங்கினால் ஒருவருடைய வாழ்நாள் முழுவதுமே அதற்குச் செலவாகிவிடும். மேலும் எவ்வளவு மன உறுதி இருப்பினும் ஐந்தையும் அடக்குதல் இயலாத காரியம் என்பதை இளவயதினராகிய நம்மாழ்வார், காழிப்பிள்ளையார் என்பவர்கள் கூற்றாலும், நாவரசர், அடிகளார் போன்றவர்கள் கூற்றாலும் நன்கு அறியலாம். நம்முடைய ஆற்றலால் இவற்றை அடக்க முடியாது என்றால், வேறு வழிதான் என்ன? அந்த வழியை அடிகளார் இதோ குறிக்கின்றார். திருவடி என்தலைமேல் நட்டமையால், கண்டகர்தம் வல் அரட்டை அடக்கும்’ என்ற தொடரால் இறை அருள் கிட்டாதபோது புலனடக்கம் என்பது கற்பனையே என்பதை எடுத்துக் கூறுகிறார். 567 ஆம் பாடலில் செய்' என்ற நிலம் உழவு (விளாவி) செய்தபிறகும், பயனற்றுப் பாழ்நிலமாகவே இருந்துவிட்டதைக் குறிக்கின்றார். உழவு செய்தபிறகும் பாழ்நிலமாகவே இருந்தது என்றால், எவ்வளவு பாடுபட்டு அந்த நிலத்தில் விதைத்தாலும் எவ்விதப் பயனையும் தராததுபோலத் தம்முடைய வாழ்க்கை அமைந்துவிட்டதைக் குறிப்பாக உணர்த்துகிறார்.