பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை_183 ஆன்ம முன்னேற்றம் இல்லாமல் அமைச்சராகமட்டும் இருந்தபோது ஏனையோர் இவரைப் போற்றியதுபோல, அந்தப் பாழ்நிலத்தையும் செய் என்ற பெயரால் அழைத்தனர். ஆனால், அமைச்சராக இருந்த இவர் ஆன்ம முன்னேற்றம் பெறும் வாய்ப்பைப் பெற இல்லை. பாழாய்ப்போன அந்த நிலத்தில் எவ்வளவுதான் உழவு செய்து பயிர் வைத்தாலும் எவ்விதப் பயனும் கிட்டாதது போலத் திருவாதவூரர் வாழ்க்கையும் எவ்விதப் பயனையும் விளைக்காமல் திருப்பெருந்துறை நிகழ்ச்சிவரை இருந்துவிட்டது. இந்தப் பாழ் நிலைத்திற்குச் சொந்தக்காரன் ஒருநாள் நடந்து செல்கையில் எதிர்பாராமல் ஒரு பொற்கிழி (கிழியீடு) ஒன்று வழியிற் கிடைத்து, அவனுடைய வாழ்க்கையையே மாற்றிவிட்டது. அந்த நிலச் சொந்தக்காரனைப் போன்ற திருவாதவூரர், குதிரை வாங்கவேண்டு மென்ற எண்ணத்துடன் தொண்டிக்குச் செல்லும் வழியில், திருப்பெருந்துறையில் பொற்கிழி போன்ற குருநாதரை எதிர்பாராமல் சந்தித்தார். பொற்கிழி விவசாயியின் வாழ்க்கையை மாற்றிற்று; பொற்கிழி போன்ற குருநாதர் வாதவூரரின் வாழ்க்கையையே மாற்றிவிட்டார். அற்புதப்பதது எட்டுப் பாடல்களில் ‘அற்புதம் அறியேனே என்றும் இரண்டு பாடல்களில் அற்புதம் விளம்பேனே என்றும் குறிப்பிடுவது நோக்கத்தக்கது. இல நிகழ்ச்சிகள் நடைபெறும்பொழுது அதனுடைய சிறப்பும் தனித்தன்மையும் ஒரளவு அறியப்படுமே தவிர அதன் முழுத்தன்மையும் அந்த நேரத்தில் நம்மால் அறியப் படுவதில்லை. குருநாதர் வடிவும், அந்த வடிவில் திோன்றிமறைந்த பிறவடிவங்களும் மனிதக் காட்சியில்