பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை_185 எப்படியெல்லாம் நின்றது என்பதை இரண்டு பாடல்களில் பேசுகின்றார். நாம, ரூபம் கடந்த பொருள் மெய்யனாய் வந்து நின்றது; திருவருள் தந்தது. அந்தத் திருவருளுக்கு அடையாளமான பொன்னடியினைக் கண்ட அந்தக் கணத்திலேயே இவையெல்லாம் மறைந்து, பரவெளிதரிசனம் வெளிகாட்டி) தந்தது. ஒரே விநாடியில் பருவடிவுடனும், பரவெளியாகவும் காட்சி தந்த அந்த அற்புதத்தை அன்றே உலகறிய எடுத்து விளம்பாமல் போய் விட்டேனே என்ற முறையில் முதல் இரண்டு பாடல்கள் தோன்றின. பின்னர், பேசுதல் பற்றிய நினைவு முற்றிலும் அடங்கிவிடுகின்றது. வெளிப்பட்டு நின்ற பொருளின் பெருமையை அறியமுற்படவில்லையே என்ற பச்சாதாப உணர்ச்சியில் எஞ்சிய பாடல்கள் 'அறியேனே என்று முடிகின்றன. விளம்புதல் அடங்கிய நேரத்தில் அறிதல் தொழிதல் தொடங்குகிறது. - ‘நாட்கள் செல்லச் செல்ல வெளிகாட்டி நின்று அடியனாய் என்னை ஆட்கொண்டதை எவ்வளவோ சிந்தித்துப் பார்க்கிறேன். என் தகுதி என்ன? எனக்கு ஏன் இது நிகழ்ந்தது என்றெல்லாம் சிந்திக்கிறேன். நடந்தது அற்புதம் என்ற அளவில்தான் தெரிகிறதே தவிர, இதன் அடிப்படைத் தத்துவம் என்ன, அது ஏன் எனக்கு நடைபெறவேண்டும் என்றெல்லாம் சிந்திக்கத் தொடங்கியபொழுதுதான், அற்புதம் நடந்த அன்றுமட்டுமல்ல, இன்றும்கூட, இந்த நிகழ்ச்சியின் அடிப்படையை என்னால் அறியமுடியவில்லை என்கிறார். இதனையே அற்புதம் அறியேனே என்ற தொடரில் குறிப்பிடுகின்றார். 'அறியேனே என்பதில் உள்ள ஏகாரம், இன்றுகூடத் தெரியவில்லையே என் செய்வேன் என்ற பச்சாதாப உணர்ச்சியை வெளிப்படுத்தி நிற்கின்றது. ஒரு நாட்டின் அமைச்சரை ஒரே விநாடியில் அடியாரிடை அமரச்செய்தது அதிசயம். ஏன்? இங்கு