பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை_187 எவ்வளவு முயற்சி செய்தும் பொருளைப் பெறுவதற்குரிய தகுதி இல்லையென்றாலும் பயன் விளையாது. தகுதியும் முயற்சியும் இல்லாத தமக்குத் திருவடிக் காட்சி கிடைத்தது அற்புதம் என்று அடிகளார் கூறுவதில் வியப்பு ஒன்றுமில்லை. இவை இரண்டுமில்லாத அவருக்கு அற்புதம் என்று கூறப்பெற்ற வகையில் என்னென்ன கிடைத்தன? நாம, ரூபம் கடந்த ஒருவன். மனிதருடைய அறிவு கற்பனை என்பவற்றைக் கடந்துநிற்கும் ஒருவன். தகுதி முயற்சி என்ற இரண்டுமில்லாத திருவாதவூரர் என்ற மனிதருக்காக, மானிட வடிவு தாங்கி, வழியில் அமர்ந்து, அவரை வலிய ஆட்கொண்டான். அமைச்சர் கோலத்தில் வருகின்ற ஒருவர் குருநாதர் வடிவிலிருந்த ஒருவரைக் கண்டவுடன் துறவு பூண்ட ஒரு மனிதர் என்றுதானே நினைத்திருக்க வேண்டும்! அவ்வாறில்லாமல் புவனியில் சேவடி தீண்டினன், சிவன் என யானும் தேறினன் (3.61,62) என்று சொல்ல எவ்வாறு துணிவு பிறந்தது? மிகச் சாதாரணமான தேவர்கள்கூடப் புவனியில் சேவடி தீண்டமாட்டார்கள் என்பது இந்நாட்டார் நம்பிக்கை. அப்படியிருக்க, புவனியில் சேவடி தீண்டிக் குருநாதர் வடிவுடன் அமர்ந்திருந்த ஒரு மனிதரை அமைச்சர் கோலத்திலிருந்த ஒருவர் சிவன் என்று தேறினார் என்றால் இது எவ்வாறு முடிந்தது? இதனையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் மூன்று அற்புதங்கள் நிகழ்ந்ததை அறிய முடிகிறது. சிவனாக இருந்தும் புவனியில் சேவடி தீண்டி அமர்ந்திருந்தது முதலாவது அற்புதம் - புவனியில் சேவடி தீண்டி அமர்ந்திருந்த ஒரு மனிதரை அவர் சேவடியைக் கொண்டே சிவன் என அடிகளார் தேறினது இரண்டாவது அற்புதம்