பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

199-திருவாசகம் சில சிந்தனைகள்-5 அந்த முழுவடிவைப்பற்றிக் கூறிக்கொண்டுவரும் அடிகளார், 'பொன்னடி இணைகாட்டி. மெய்யனாய் வெளி காட்டி நின்றார் என்றல்லவா பேசுகிறார்! அடுத்த பாடலிலும் பொற்கழல் இணைகாட்டி வேந்தனாய் வெளியே என்முன் நின்றான் என்றல்லவா பேசுகிறார். எதிரே நிற்கும் ஒருவரைப்பற்றிப் பாடும்போது முதன்முதலில் பொன்னடி காட்டி என்றும் பொற்கழல் இணைகாட்டி என்றும் பாடுவது வியப்பல்லவா? எதிரே உள்ளவரின் முழுவடிவத்தில் இவர் ஈடுபட்ட பகுதி திருவடி என்றல்லவா தெரிகிறது! நாம் கூறும் இந்த முடிபு உண்மைதான் என்பதை இப்பதிகத்தில் வரும் பிற ஐந்து பாடல்கள் நிரூபிக்கின்றன. 'திருந்து சேவடி (72) மென்மலர்க்கழல் (573), மலரடி இணை (7) விரைமலர்க் கழல் (577) இணைமலர்க் கழல் (578) எனவரும் ஐந்து தொடர்களும் மேலே கூறிய கருத்தை வலுவடையச் செய்கின்றன. அழகிய திருமேனிகொண்டு மானுட வடிவுடன் குருநாதர் எதிரே வீற்றிருந்தார். அப்படி இருந்துங்கூட அத்திருவடி அடிகளாரின் முழு ஈடுபாட்டையும் தன்பால் ஈர்த்துக் கொண்டது அற்புதம். இவ்வாறு வெளிப்படையாகக் கூறுவதன்றிக் குறிப்பாகவும் ஒர் அற்புதத்தை வெளியிடுகின்றார் அடிகளார். வீடுபேறு அடைய வேண்டுமானால் பெண்ணைத் துறந்து, காடுகள் சென்று, கனசடை வைத்துத் தவம் புரிவது ஒன்றே வழி என்று பல சமயத்தவரும் கூறியுள்ளனர். ஆனால், தமிழர்களின் தொன்மைச் சமயங்களாகிய சைவம், வைணம் இரண்டும் இக்கூற்றை ஏற்றுக் கொள்ளவில்லை. இல்லறத்தில் வாழ்ந்து உலக இன்பங்களை அனுபவித்துக்கொண்டேகூட உய்கதி அடையமுடியும் என்று கருதினர்; கூறினர்.