பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 ம் திருவாசகம் சில சிந்தனைகள்-5 - குணங்குறி கடந்த ஒருவன், வடிவு தாங்கி இவருக்கு நேரே காட்சி தந்தது ஒர் அற்புதம். குருநாதரின் திருவடிகளில் அடிகளார் எல்லையற்ற ஈடுபாடு கொண்டது ஒர் அற்புதம். இவை தவிர மேலும் ஓர் அற்புதத்தையும் அற்புதப் பத்தின் எட்டுப் பாடல்களில் அடிகளார் பாடுகிறார். தையலார் எனும் சுழித்தலைப் பட்டு நான் தலைதடு மாறாமே (569) சாந்தம் ஆர் முலைத் தையல் நல்லாரொடும் தல்ைதடுமாறு ஆகி, போந்து யான் துயர் புகாவணம் (570) கருங்குழலினார் கண்களால் ஏறுண்டு கலங்கியே கிடப்பேனை (572) மங்கையர் தம்மோடும் கூடி அங்குள குணங்களால் ஏறுண்டு குலாவியே திரிவேனை (573) மங்கையர் தம்மோடும் பிணைந்து வாய் இதழ்ப் பெருவெள்ளத்து அழுந்தி நான் பித்தனாய்த் திரிவேனை (574) தடமுலையார் தங்கள் மைப்பு உலாம் கண்ணால் ஏறுண்டு கிடப்பேனை (575) இச்சையாயின. ஏழையார்க்கே செய்து அங்கு இணங்கியே திரிவேனை - (577) செறிகுழலார் செய்யும் கிறியும் கீழ்மையும் கெண்டை அம்கண்களும் உன்னியே கிடப்பேனை (578) என்பவற்றால், இத்தனை இருந்தும் அவன் அருள்பாலித்தான் என்பதை வலியுறுத்துகிறார். அற்புதப் பத்து என்று பெயரிடக்கூடிய முறையில் தம்முடைய வாழ்க்கையில் நிகழ்ந்த அற்புதங்களைப் பட்டியலிட்டுக் கூறும் அடிகளார் பூரண வடிவு