பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை • 193 தரிசனத்தை இரண்டு பாடல்களிலும் (559, 570) திருவடி தரிசனத்தை ஐந்து பாடல்களிலும் (572, 573, 575, 577, 578) கூறியதுடன் தையலார் மயக்கத்திலிருந்து தம்மை விடுவித்தது அற்புதம் என்ற கருத்துத் தொனிக்கும்படி மேற்காட்டிய எட்டுப்பாடல்களில் கூறுகிறார். புலன் உணர்வில் தோய்ந்து அல்லற்பட்டு, ஆற்றாது, வெளிவரும் வழி தெரியாமல் புலம்பும் மானிட சாதிக்கு நம்பிக்கையூட்டும் ஒரு கலங்கரை விளக்கமாக இப்பத்தைப் பாடியுள்ளார் என்று கூறுவதில் தவறொன்றும் இல்லை. அவன் திருவடிகளில் நம்பிக்கை வைத்து முன்னேற முயன்றால் வெல்லமுடியாத பாலுணர்ச்சியையும் வெல்ல முடியும் என்பதை அறிவுறுத்தவே இந்த அற்புதப் பத்து அமைந்ததோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இவ்வாறு கூறுவதால் மணிவாசகப் பெருமானின் உயர்வுக்குத் தாழ்வு கற்பித்துவிட்டோம் என்று யாரும் நினைக்கவேண்டா. அடிகளார் போன்ற பெருமக்களின் பாடல்கள் தவிர அவர்கள் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளும் சில உணர்வுகளுடன் போராடி வெல்வதற்கு அவர்கள் கையாண்ட வழியும் நமக்கு வழிகாட்டிகளாகும் என்று நினைப்பதில் எவ்விதத் தவறும் இல்லை. இப்பத்தின் முதற்பாடலில் (569) இரண்டு உருவகங்கள் பேசப்பெறுகின்றன. இரண்டு உருவகங்களும் ஆழ்ந்த சிந்தனைக்குப்பின் அடிகளாரால் உருவகிக்கப்பட்டவை யாகும். மண்ணிடை வாழும் உயிர்வாழ்க்கையை ஆழி' (கடல்) என்று உருவகிக்கின்றார். கடல் என்பது பரந்தும், விரிந்தும், ஆழ்ந்தும் இருக்கின்ற ஒன்றாகும். கடலில் வீழ்ந்தவர் மடிந்தே தீரவேண்டும் என்ற இன்றியமையாமை இல்லை. ஒரு படகு, ஒரு சுரைக்குடுக்கை, அல்லது ஒரு மரக்கட்டை என்பவற்றுள் ஏதேனுமொன்று கிடைத்துவிட்டால் அமிழ்ந்து போக வேண்டிய அவசிய மில்லை. இவற்றைப் புணை என்று கூறுவர். சாதாரணக்