பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 திருவாசகம் சில சிந்தனைகள்-5 கடலிலிருந்து மீள இப்புணைகளுள் ஏதேனும் ஒன்றின் துணையிருந்தால் போதுமானது. பிறவியாகிய கடலிலிருந்து மீள மேலே கூறப்பட்ட புணைகள் எவையும் பயன்படா. பிறவிக் கடலிலிருந்து மீள ஒரே ஒரு புனைதான் உண்டு. அந்தப் புணைக்கு ஐந்தெழுத்து என்ற பெயரும் உண்டு. இதனையே அடிகளார் 'ஐந்தெழுத்தின் புனை பிடித்துக் கிடக்கின்றேனை (3) என்று பாடியுள்ளார். பிறவியாகிய கடலிலிருந்து வெளியேறுவதே கடினம் என்றால் அக்கடலினுள் யாரும் அறியாமல் புறத்தே அதிகம் காணப்படாமல் இருக்கும் சுழல்களும் உண்டு என்பதை அறிதல் வேண்டும். கடலிலிருந்து தப்பித்தாலும் சுழலில் மாட்டிக்கொண்டால் வெளியேறுவது மிகமிகக் கடினமாகும். சுழலிலுள்ள ஆபத்து தனித்தன்மை வாய்ந்தது. சுழலில் அகப்பட்டவர்களைக் காப்பாற்றச் செல்பவர்களையும் உள்ளே இழுத்துவிடும் ஆற்றல் வாய்ந்தது இச்சுழலாகும். இந்த அருங்கருத்தையே "தையலார் எனும் சுழித்தலைப்பட்டு’ என்று பாடுகிறார் அடிகளார். இதுவே இரண்டாவது உருவகமாகும். சுழித்தலைப்பட்டு என்ற தொடரின் பின்னர் வரும், நான் தலை தடுமாறாமே என்ற சொற்கள் மிக நுண்மையான அனுபவப்பொருளைக் குறிப்பவையாகும். சுழலில் சிக்கியவர்களைக் கண்டவர்களுக்கே இச்சொல்லமைப்பின் அருமைப்பாடு நன்கு விளங்கும். நட்டமாக அதாவது தலைமேலும் கால் கீழுமாகச் சுழலில் சிக்கினாலும், அதில் குதித்தாலும் ஒரே விநாடியில் குதிப்பவரின் தலையைச் சுழற்றி அத்தலை கீழும், கால் மேலுமாகச் செய்துவிடும். இதனையே அடிகளார் தலை தடுமாறாமே என்று குறிக்கிறார். மகளிர் வலையில் சிக்கியவர்கள் கதியும் இதுதான் என்பதை உய்த்துணர்ந்து கொள்ளலாம். மிக உயர்ந்த