பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை-9-195 நிலையில் உள்ளவர்கள், பெரும்பதவி வகிப்பவர்கள், பிறரால் மதித்துப் போற்றப்படும் நிலையில் உள்ளவர்கள் என்பவர்கள்கூட மகளிர் சுழலில் அகப்படுவார்களேயானால் தலைதடுமாறிப்போவர் என்பதை இன்றைக்கும் நாம் காண்கிறோம். இந்த அருமைப்பாடுகளை உள்ளடக்கி, இதிலிருந்து ஒருவன் மீளவேண்டுமேயானால் இறைவன் திருவருளைப் பெறுவது ஒன்றே வழி என்பதை அனுபவ ஞானியாகிய அடிகளார் நான் தலை தடுமாறாமே.. திருவருள் தந்து தன் பொன் அடி இணைகாட்டி (என்) முன்னின்றது ஓர் அற்புதம்’ என்று அருளிச்செய்கிறார். அடிகளாரின் வாழ்க்கையில் இன்றுநாம் அறிந்து கொள்ள முடியாத சில நிகழ்ச்சிகள் நிகழ்ந்திருக்குமோ என்று ஐயப்பட அடிகளாரின் I J☾Ꭱ) பாடல்கள் இடந்தருவதை முன்னரும் குறிப்பிட்டுள்ளோம். 571ஆம் பாடலில் வரும் அடித்துஅடித்து அக்காரம் முன்திற்றி’ என வரும் தொடர் நம் ஐயத்தையும் சிந்தனையையும் துரண்டுவதாக அமைந்துள்ளது. சர்க்கரை கலந்த பண்டத்தை யாரும் விரும்பி உண்பர். குழந்தைகள் முதல் பெரியோர்வரை அனைவரும் செய்யும் செயலாகும் இது. அப்படியிருக்க, அடித்து அடித்து அக்காரம் தீற்றவேண்டிய தேவை என்ன? இந்த உவமையில் அக்காரம் என்பது, திருப்பெருந்துறையில் அடிகளாருக்குக் கிடைத்த இறையனுபவமே ஆகும். இந்த உவமையை முழுவதுமாய் ஏற்றுக் கொள்வதானால் கிடைத்த இறையனுபவமாகிய அக்காரத்தை அடிகளார் கைவிட்டுவிட்டார் என்று சொல்லவேண்டி உள்ளது. இந்த அனுபவம் கைவிட்டுப் போனதும் அடிக்கடி தோன்றி மறைந்ததும் உண்மைதான் என்பதை முன்னரே பல இடங்களில் எடுத்துக் காட்டியுள்ளோம்.