பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198-திருவாசகம் சில சிந்தனைகள்-5 உண்டு. ஆனால் இவற்றினும் மிகப் பன்மடங்கு அதிகமான அதிர்வுகளையுடைய ஒலிகளும் உண்டு. அவற்றை 'அல்ட்ரா சவுண்ட் (ultra Sound) என்று கூறுவர். இந்த அதிர்வுகள் அழித்தல் தொழிலையும் செய்யக்கூடியவை. இவையெல்லாம் இந்த உலகத்தில் தோன்றக்கூடியதோற்றுவிக்கக்கூடிய ஒலிகளேயாம். அசுத்த மாயா காரியமாகிய இந்த உலகத்தில் தோன்றும் இந்த ஒலிகளும் இந்தப் பிரபஞ்ச எல்லைக்கு உட்பட்டவையே ஆகும். இவையெல்லாம் தோன்றுவதற்கு, ஏன், இந்தப் பிரபஞ்சமே தோன்றுவதற்குக் காரணமாகவுள்ள மூல ஒலியை ஆதி நாதம்' என்று பெரியோர் கூறுவர். அந்த ஆதிநாதம் மக்கள் செவிப்புலனுக்கும் கற்பனைக்கும் அப்பாற்பட்டது ஆகும். ஆன்மிகத் துறையில் தலைநின்றவர்கள், அருளாளர்கள் ஆகியோருக்கு இந்த ஒலியைக் கேட்கும் வாய்ப்பு ஒரோவழி கிடைத்தல் கூடும். அதனையே நாத தரிசனம் என்பர். இந்த ஆதி நாதத்திற்குச் சைவப்பெருமக்கள் தந்த மற்றொரு பெயர் சிலம்பொலி என்பதாகும். அந்தச் சிலம்பொலியைக் கேட்கும் வாய்ப்புச் சேரமான் பெருமாள் நாயனார், அடிகளார் போன்றவர்களுக்கே கிட்டியது; அதனையே அடிகளார் திருந்துசேவடிச் சிலம்பவை சிலம்பிட அருந்துணைவனாய். (வந்து ஆண்டுகொண்டு’ (572) அருள்செய்தான் என்கிறார். - சிலம்பு சிலம்புதலையே நாத தரிசனம் என்று குறிப்பிட்டோம். . 573ஆம் பாடலில் இருவகைப் போக அனுபவங்களைப் பேசுகிறார் அடிகளார். இந்த உலகில் மானிட உடம்பை எடுத்த ஒர் உயிர், இந்த உடம்பின் மூலமாகமட்டும் அனுபவிக்கின்ற போகங்களை வரிசைப்படுத்துகின்றார் அடிகளார். அதையும் இரண்டாகப் பிரித்துப் பேசுகிறார்.