பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 0 திருவாசகம் சில சிந்தனைகள்-5 அப்படியானால் உருப் பெற்றான் என்பதை எவ்வாறு அறிவது? அதற்கு விடையாக அடிகளார் 'அமுதாம் சிவபதத்தை என்று கூறுகிறார். அமுதத்தை உண்டதுபோன்ற ஒரு நிறைவும், அமைதியும் ஆனந்தமும் ஒருங்கே தோன்றுகின்றன. இவற்றை நாம் அனுபவிக்க முடியும். இந்த அனுபவம் ஏற்படும்போது உள்ளே இறைவன் புகுந்துவிட்டான் என்பதை அனுமானத்தால் அறியமுடியும். அதைக் குறிக்கவே 'அமுதாம் சிவபதம்’ என்கிறார் அடிகளார். 563. பேரும் குணமும் பிணிப்பு உறும் இப் பிறவிதனைத் தூரும் பரிசு துரிசு அறுத்துத் தொண்டர் எல்லாம் சேரும் வகையால் சிவன் கருணைத் தேன் பருகி ஆரும் குலாத் தில்லை ஆண்டானைக் கொண்டன்றே 5 உடம்பை எடுக்காத உயிர்கள் தனியே ஒரு பெயரைப் பெறுவதில்லை. அதேபோன்று உயிரோடு இருக்கும் பொழுது ஒரு குறிப்பிட்ட பெயருடன் விளங்கும் இந்த உடம்பு அவ்வுயிர் போனவுடன் இந்தப் பெயரையும் இழந்து, பிணம் என்ற பொதுப்பெயரைப் பெறுகிறது. அதேபோன்று உடம்பில்லாமல் உயிர்கள் தனியே இருக்கும்பொழுது முக்குண வசப்படுதல் இல்லை. உயிரற்ற உடம்பும் முக்குண வசப்படுதல் இல்லை. எனவே, ஒரு குறிப்பிட்ட பேரும் முக்குண வசப்படும் இயல்பும் ஒரு பிறவியை எடுத்த பின்னரே உண்டாகின்றன. அப்பிறவி போய்விட்டால் பேரும் குணமும் உடன் மறைந்து விடுகின்றன. இதனைக் கூறவந்த அடிகளார் பேரும் குணமும் பிணிப்பு உறும் இப்பிறவி என்று கூறுகின்றார். இப்பிறவி ஒரு பள்ளமாகும். பள்ளம் என்று இதனை உருவகிக்க ஒரு முக்கியமான காரணமுண்டு. பள்ளத்தில் வீழ்ந்துவிட்ட ஒன்றுக்குத் தானே கரையேறும் வாய்ப்பு ஏறத்தாழ இல்லையென்றே சொல்லலாம். இப்பள்ளத்தில்