பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 திருவாசகம் சில சிந்தனைகள் 5 ஒரு நம்பிக்கை. குறிப்பிட்ட ஒரு மந்திரத்தைப் பல்லாயிரமுறை உச்சாடனம் செய்வதால் அந்த மந்திரத்திற்குரிய தேவதைகளை நேரிடையாகத் தரிசனம் செய்யும் வாய்ப்புக் கிட்டும் என்பது மற்றொரு நம்பிக்கை இக்கூற்றுக்களில் ஒரு பெருமளவு உண்மை உள்ளது என்பதை மறுத்தற்கில்லை. ஆனால், சைவ சமயத்தைப் பொறுத்தவரையில் இந்த உச்சாடனமுறை பெரிதாகப் போற்றப்படவில்லை. உச்சாடனம் என்று வரும்போது பழக்கவசத்தால் அந்த மந்திரங்கள் மனத்துக்குள் உருளத் தொடங்கிவிடும். இது நடைபெறும்போது பொறி புலன்கள் மனம் ஆகியவை இந்த உச்சாடனத்தில் ஈடுபடாமலும் போகலாம். இக்குறையைப் போக்க நம்முடைய முன்னோர்கள் ஒரு வழியைக் கண்டனர். காழிப்பிள்ளையார் ஒரே பாடலில் இவ்வழியை எடுத்து விளக்குகின்றார். காதலாகிக் கசிந்து கண்ணி மல்கி ஒதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே (திருமுறை :3:49, ! என்ற பாடலில் அடிகளார் கூறிய 'ஒசையால் உணர்வார்’ என்பதைக் காழிப்பிள்ளையார் வேதம் நான்கினும் என்ற சொல்லால் குறிப்பிடுகின்றார். எனவே, காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்க ஐந்தெழுத்தை ஒதுபவர்கள் உணர்வுக்குள் சிக்கிக்கொள்கிறான் இறைவன். இவ்வாறில்லாமல் வெறும் ஒசையளவில் உச்சாடனம் செய்பவர்களுக்கு இறைவன் எளிதில் கிட்டமாட்டான் என்பதை அடிகளார் ஒசையால் உணர்வார்க்கு உணர்வு அரியவன்' என்கிறார்.