பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை_201 சென்னிப்பத்து சென்னிப் பத்து என்ற பெயருடன் விளங்கும் இப்பத்துப் பாடல்களையும் ஒரே நேரத்தில் படித்து முடித்தால் என் போன்றவர்களுக்கு இத்தலைப்பைப்பற்றிய ஒர் ஐயம் தோன்றத்தான் செய்கிறது. சென்னி மன்னி' என்று பாடல்தோறும் வருவதால் மேலோட்டமாகப் பார்க்கும்போது தம் சென்னிக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பாடியுள்ளார் என்று பலரும் நினைப்பதில் ஒரளவு பொருள் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், ஆழ்ந்து நோக்கினால் இப்பத்துப் பாடல்களிலும் சென்னியைவிடச் சேவடியும் அதன் சிறப்பும்தான் மிக அதிகமாகப் பேசப்படுகின்றன என்பது நன்கு விளங்கும். தமிழகத்தில் தோன்றிய சைவம், வைணவம் ஆகிய இரு சமயங்களும் இறைவனுடைய திருவடிப் பெருமை பேசுவதில் இணையற்று விளங்குகின்றன. உயிர்களை உய்விக்க வல்லது இறைவனுடைய கையோ, கண்ணோ அல்ல திருவடியே என்ற கருத்து இந்த இரு சமயத்தாரிடை வலுவாக நிலைபெற்று இருந்து வருகிறது. நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன் இரு தாள் மலர்க்கீழ் மூவகை உலகும் முகிழ்த்தன முறையே (ஐங்குறு-) என்ற சங்கப்பாடல் தொடங்கித் திருவடிப்பெருமை பேசப் பெறுவதைப் பன்னிரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய பெரிய புராணத்தில் வரும் 'மலர்சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம்’ (பெ.பு :-) என்பதுவரை நீண்டு செல்வதைக் காணமுடியும். மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த காரைக்கால் அம்மையார் பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் காதல், சிறந்து நின் சேவடியே சேர்ந்தேன்’ (அற்புதத்திரு-) என்பது போன்று பல இடங்களில் பாடுவதையும் G5fTGJðT(Fl)fft f}.