பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 திருவாசகம் சில சிந்தனைகள்-5 ஆறாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் வாழ்ந்த நாவரசர் பெருமான், பதிகத்திற்குப் பத்துப் பாடல் என்ற மரபையும் மீறி, இருபது பாடல்கள் கொண்ட ஒரு பதிகத்தைப் பாடியுள்ளார். திருவையாற்றில் பாடப்பெற்ற இப்பதிகத்தின் சிறப்பு என்னவென்றால், இருபது பாடல்களும் ஐயாறன் அடித்தலமே' என்று முடிவதே ஆகும். இந்தத் திருவடி, உயிர்களுக்குப் பாதுகாப்பாகவும் துணையாகவும் கைதுக்கிவிடும் நண்பனாகவும் துயரைத் தடுக்கும் குடையாகவும் உள்ளது என்ற கருத்தை இருபது பாடல்களிலும் சொல்லிச்செல்வதைக் காணலாம். இவற்றையெல்லாம் மனத்துட் கொண்டு சென்னிப் பத்தில் வரும் பாடல்களைப் பார்த்தால் இத்தலைப்புச் சரியோ என்று எண்ணத் தோன்றுகிறது. சென்னி என்ற ஒரு சொல்லைத் தவிரச் சென்னிபற்றிய வேறு எவ்விதக் குறிப்புமில்லை. ஆனால், இச்சென்னிக்கண் தங்கி மலர்கின்ற திருவடியைப்பற்றி ஒவ்வொரு பாடலும் நான்கடியில் மூன்றே முக்கால் அடிவரையில் திருவடிப்பெருமை பேசுகின்றது. - சைவ அடியார்கள் பாடல் மரபு அடிப்படையில் இந்தப் பதிகத்திற்குப் பெயரிடவேண்டுமானால் திருவடிப் பத்து' என்ற தலைப்பே பொருத்தமாக இருக்கும். பராபரனுடைய மூன்று வேறுபட்ட நிலைகளை இப்பதிகத்தின் நான்காம் பாடல் (582) பேசுகிறது. 'பராபரன் பக்தர் சூழ் பார்ப்பான் எனப் பாரில் வந்து' திருப்பெருந்துறையில் காட்சி தந்தான். இந்த இடத்தில் அவன் மேற்கொண்ட வடிவம் மானுட வடிவேயாகும். அடுத்த நிலையில் சித்தர் சூழத் தில்லையில் கூத்தாடுகிறான். மானிட வடிவத்திற்கும் கூத்திடும் இந்த வடிவத்திற்கும் தொடர்பேயில்லை. மூன்றாவது நிலை அடிகளாரின் சித்தத்தின் எத்தனாய் உள்புகுந்த நிலை. அந்த உள்புகுந்த நிலையில் எவ்வித வடிவுமில்லாமல்