பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை_203 சோதி சொரூபனாகவே உள்புகுந்தான் என்று முன்னரும் பல இடங்களில் கூறியுள்ளார். மானிட குரு, கூத்த வடிவம், சோதி சொரூபம் என்ற மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை. இந்த மூன்று வடிவங்களும் ஒருவனுடைய வடிவங்களே என்று அடிகளார் எப்படிக் கண்டுபிடித்தார்? உலகியல் முறையில் ஒருவரை அடையாளம் காண்பதற்கு இன்றியமையாத உறுப்பு முகமேயாகும். அப்படியானால் மாறுபட்ட முகங்களையுடைய குருநாதர், கூத்தன், சோதி என்ற மூன்றும் ஒன்றே என்று எவ்வாறு கூறினார்? இதன் ரகசியம் ஒன்றுண்டு. முகங்கள் மாறுபட்டனவே தவிர திருவடியில் எவ்வித மாற்றமும் இல்லை. அடிகளாரோ இந்த மூன்று வடிவங்களிலும் அவற்றின் திருவடிகளிலேயே மனத்தைச் செலுத்தினார். புவனியில் சேவடி தீண்டிய குருநாதர் திருவடியும், கூத்தாடும் திருவடியும், சோதி சொரூபனின் திருவடியும், தம் சென்னிக்கண் வந்து தங்கிய திருவடியும் ஒன்றே என்பதை நன்கு உணர்ந்துவிட்ட காரணத்தால் 582ஆம் பாடலில் பராபரன் சேவடியும், கூத்தன் சேவடியும், திருட்டுத்தனமாகத் தம்முள் புகுந்த சேவடியும், சென்னிக்கண் மன்னி மலரும் சேவடியும் ஒன்றே என்பதை அற்புதமாக விளக்கியுள்ளார். திருவார்த்தை இறைவனது பெருமையையும் தம்மாட்டுக் கருணை கொண்டு, குருநாதர் வடிவு தாங்கித் தமக்குச் செய்த அருளையும் ஓயாது நினைந்து அவனுடைய புகழை வாய்விட்டுப் பேசத் தொடங்குகிறார். நன்றிப் பெருக்கால் நாவானது குழறுகின்றது. இறைவனின் பல பெயர்களையும் சொல்லிச்சொல்லி இறும்பூது எய்துகிறார். உணர்ச்சி மேலிடமேலிடப் பலபெயர்களைச் சொல்லிப்புகழும் நிலை