பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204-திருவாசகம் சில சிந்தனைகள்-5 மாறிவிடுகிறது. @ിഞ്ഞി அலறல் தொடங்கிவிடுகிறது. தம்மை மறந்து, பொறி புலன்கள் அடங்கி ஒடுங்க, உணர்வு ஒருமுகப்பட்டு பேசும் நிலை மாறிவிடுகிறது. பல்வேறு செயல்களைச் சிந்திக்கும்போதுதான். பல்வேறு சொற்களால் அவற்றுக்கு வடிவு கொடுக்கவேண்டியுள்ளது. இந்த நிலையை விட்டுவிட்டு அவன் கருணை ஒன்றையே சிந்திக்கும்போது சொற்களுக்கு இடமேயில்லை. அலறல் உணர்ச்சியின் வெளிப்பாடாகும். உணர்ச்சி, அலறல் ஆகிய இரண்டின் அடித்தளத்தில் ஒரேயொரு எண்ணம் ஊசலாடுகிறது. பொறி புலன்கள் அடங்கிவிட்டனவேனும், தற்போதம் முழுவதுமாக அடங்காத நிலை இது. அதுவும் அடங்கி விட்டால் இறையுணர்வில் அமிழ்ந்து கட்டைபோல் கிடக்க நேரிடும். இது காஷ்ட சமாதி’ எனச் சொல்லப்படும். இதற்கு முந்திய நிலைதான் அலறுகின்ற நிலை. இந்த நிலையில் வேறு எண்ண ஓட்டங்களுக்கு இடமேயில்லை. தற்போதம் முழுவதும் அடங்காமையின், தமக்கும் அவனுக்குமுள்ள தொடர்பை அதாவது இந்த நிலை வருவதற்கு முன்னிருந்த தொடர்பு, இப்போது புதிதாக ஏற்பட்ட தொடர்பு என்ற இரண்டையும் ஒன்றன்பின் ஒன்றாக நினைக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த முதல் நிலையில், அதாவது பழைய தொடர்பு நிலையில், இந்த 'நான்' தனியே நின்று அவனுடைய புகழை ஒவ்வொன்றாகச் சொல்லிப் பரவுகின்றது. அப்படிப் பரவிக்கொண்டிருக்கும்போதே புதிய தொடர்பு தன் பணியைத் தொடங்குகிறது. இப்பணியின் முதற்படியில் நான் பெரும்பகுதி மடங்கிவிடுகிறது. அது மடங்கிவிட்ட காரணத்தால் பல்வேறு பெயர்களைச் சொல்லிப் புகழும் நிலை மறைந்துவிடுகிறது.