பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை Ó 205 இரண்டாவது நிலையில் இந்த நான் மேலும் அடங்கிவிட, ஒரே சொல்தான் வெளிவருகின்றது. அதுவே ‘எம்பெருமான் என்ற சொல்லாகும். இந்தச் சொல்லிலுள்ள 'எம்' பகுதியில் 'நான் மறைந்துவிட, எம்பெருமான் எம்பெருமான் என்று அரற்றுகின்றவர் எங்கோ மறைந்து விடுகிறார். எம்பெருமான் என்ற சொல்மட்டும் இந்த மறைந்துவிட்ட "நானில்’ தொடங்கி, பிரபஞ்சம் முழுவதிலும் எதிரொலிக்கின்றது. இந்த நிலையிலிருந்து சற்றுக் கீழிறங்கும்போது மறுபடியும் 'நான்' ஒரளவு விழிப்படைகிறது. ‘எம்பெருமானில் இருந்து வெளிப்பட்ட ‘நான்’ இப்பொழுது தனியே நின்று பெருமானைப் பார்க்கின்றது. அவன் தலைவன்; தான் அடிமை, அவனுடைய சொத்து என்ற எண்ணம் "நானில்’ முகிழ்க்கின்றது. இந்த எண்ணத்தின் வெளிப்பாடே “எம்பிரான்’ என்ற சொல்லாகும். ஆண்டான்- அடிமைத் திறத்தை மிக நுண்மையாக வெளிப்படுத்தும் எம்பிரான்’ என்ற சொல் இறைவன் ஒருவனுக்கே உரியதாகும். இந்தச் சொல்லை அடிகளார். வேறு யாருக்கும் பயன்படுத்தியதில்லை. இந்தச் சொல்லின் சிறப்பையும் நுணுக்கத்தையும் அறிந்த நம் முன்னோர் பாடல்தோறும் இச்சொல்லைத் தாங்கிவரும் பதிகத்திற்குத் 'திருவார்த்தை' எனப் பெயரிட்டனர்போலும், இறைவன் புகழை விரிக்கும் பல சொற்களை அடிகளார் பயன்படுத்தியிருப்பினும் அவற்றைத் திருவார்த்தையென்று ஒருமைச்சொல்லால் குறிப்பிடவில்லை. அதனால் திருவார்த்தை என்ற ஒருமைச்சொல் எம்பிரான் என்ற சொல்லையே குறிக்கின்றது என்று நினைப்பதில் தவறில்லை.