பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை_209 இக்கதைகளை இப்பதிகத்தில் கூறுவதன் நோக்கமொன்று உண்டு. இத்தனை கதைகளிலும் வருபவன் திருப்பெருந்துறையான் என்பதை அடிகளார் அறிந்திருந்தார். அதேபோல இந்த நுணுக்கத்தை அறிந்தவர்களைத் தாம் வணங்கத்தக்க பிரான்களாக இப்பதிகத்தில் பேசுகிறார். இப்பதிகத்தின் உட்தலைப்பு அறிவித்து அன்புறுதல் என்று உள்ளது. ஒருவர்க்கு ஒன்றை அறிவித்தால் சொல்லியவர்க்கு இன்பம் உண்டாதல் இயல்பு. இறைவனுடைய புகழையும் அதனை உணர்ந்த அருளாளர்களையும் உலகத்திற்கு அறிமுகப்படுத்தல் (அறிவித்தல்) மிகச் சிறந்த பணியாகும். இறைவன் தமக்கு இன்னருள் செய்தான் என்பதில் பெருமகிழ்ச்சி அடிைகின்றார் அடிகளார். தமக்கு அருள் செய்தவன் பன்றிக் குட்டிகளுக்கும் அருள் செய்தான் ஆதலால் அவனுடைய அருளைப் பெற எல்லோருக்கும் ஒரு வாய்ப்பு உண்டு என்பதை மன்பதைக்கு அறிவிப்பதன்மூலம், ஒரளவு தம் ᏜᏋᏞᏞ&ᏡᎥ iyápᏌ[ ! நிறைவேற்றியதாக அடிகளார் மகிழ்கின்றார். அதனை உட்தலைப்பாகத் தர விரும்பிய முன்னோர், 'அறிவித்து இன்புறுதல்’ என்று ஒலையில் எழுதியிருக்க வேண்டும். படியோலை எழுதுவோர் அகரத்திற்கும் இகரத்திற்கும் அதிக வேறுபாடு தோன்றாமையால் இன்புறுதல் என்பதை 'அன்புறுதல்’ ೯7೯] எழுதினர்போலும். எண்ணப் பதிகம் இப்பகுதிக்கு எண்ணப் பதிகம் என்று யார் பெயரிட்டார்கள் என்று தெரியவில்லை. எண்ணம் என்பது மூளையிலும் மனத்திலும் ஒருசேரத் தோன்றுகின்ற ஒன்றாகும். ஒருவர் பேசும் ஒரு சொல், ஒரு தொடர், ஒரு பாடல் அனைத்துமே முதலில் முகிழ்ப்பது அவருடைய