பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குலாப் பத்து 0 13 விழுந்து அதன் பயனாகப் பல குற்றங்களையும் துரிசு) செய்யும் இந்த ஆன்மாவைக் கரையேற்றுவதுடன் மறுபடியும் அப்பள்ளத்தில் வீழ்ந்துவிடாமல் இருக்கப் பள்ளத்தையே தூர்த்துவிடுகிறான் என்ற கருத்தையே 'இப்பிறவிதனைத் துாரும் பரிசு என்கிறார் அடிகளார். பிறவிப் பள்ளத்திலிருந்து எடுக்கப்பெற்ற ஆன்மா சிவன் கருணைத் தேன் பருகுகிறது. தேனைப் பருகியவுடன் முழுநிறைவு பெறுகிறது. அப்படி முழுநிறைவு பெற்ற அடியார் கூட்டம் நிறைந்துள்ள குலாத் தில்லை என்றவாறு. 564. கொம்பில் அரும்பு ஆய் குவி மலர் ஆய்க் காய் ஆகி வம்பு பழுத்து உடலம் மாண்டு இங்ங்ன் போகாமே நம்பும் என் சிந்தை நணுகும் வண்ணம் நான் அணுகும் அம் பொன் குலாத் தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 6 இப்பாடலின் முதலிரண்டு அடிகளில் ஓர் உயிர் பிறப்பெடுத்து, வளர்ந்து இறுதியாக உடம்பு பயனின்றிக் கழன்று அழியும் நிலை உருவகமாகப் பேசப்பெறுகிறது. "கொம்பில் அரும்பு' என்றும் 'குவிமலர்' என்றும் கூறியது குழந்தைப் பருவத்திலும், இளமையிலும் அழகுடன் விளங்குவதைக் குறிப்பால் உணர்த்துகிறது. அடுத்து உள்ளது 'காய் நிலை. எந்த ஒரு காயும் இன்சுவையில்லாமல், புளிப்பு, கசப்பு முதலிய சுவைகளைப் பெற்றிருப்பதுபோல் இளமைக்கும், முதுமைக்கும் இடைப்பட்ட பருவம் பிறருக்குப் பயன்படாத பருவமாய்க் கழிதலை உணர்த்துகின்றது. - அடுத்துள்ள 'வம்பு பழுத்து உடலம் மாண்டு’ என்ற தொடர் பலருடைய .முதுமைப்பருவம் எவ்வித நற்பயனையும் விளையாமல், எட்டிக்காய் பழுத்ததுபோல் பயனின்றிப் பழுத்து மாள்கிறது என்பதைக் குறிக்கிறது. -