பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 திருவாசகம் சில சிந்தனைகள்-5 எண்ணத்திலாகும். எண்ணம் தோன்றாதபோது சொல்லோ, தொடரோ பாடலோ தோன்ற இடமேயில்லை. எண்ணம் என்பதே சொற்களின் பகுதியாகும். சொற்களின்றேல் எண்ணமில்லை. அறிவு, மனம் என்ற இரண்டும் ஒருங்கிணைந்து தொழிற்படும்போது சொற்கள் வெளிப்படுவனவாகும். இதன் எதிராக, பசி, சினம் போன்ற உணர்ச்சிகள் அன்பு, காதல் போன்ற உணர்வுகள் மனத்திடைத் தோன்றவும் வெளிப்படவும் சொற்கள் தேவையில்லை. அன்பு, காதல் என்பவற்றின் முதிர்ந்த நிலையில் சொற்களுக்கு இடமேயில்லை என்பர். உணர்ச்சிகள் தோன்றச் சொற்கள் தேவையில்லை. என்றாலும், அந்த உணர்ச்சிகளை வெளியிட சொற்கள் நிச்சயமாகத் தேவைப்படும். எண்ணங்கள் தோன்றுவதும் அவைகளை வெளிப்படுத்த உதவுவதும் சொற்களால்தான் நடைபெறுகின்றன. இந்தச் சொற்களும் இரு வகைப்படும். ஒன்று, பொருள்கள், செயல்கள், பண்புகள் என்பவற்றைப் பெயர் மாத்திரையாய்க் குறிப்பிடும் சொற்கள், மற்றது உணர்வோடு கலந்து பொருள்களிடத்தும் அவைபற்றிப் பேசும்போதும் வெளிப்படும் சொற்கள். இந்த இரண்டாவது வகைச் சொற்களே உணர்வு கலந்து வெளிப்படும். பொருள்களைக் குறிக்கும் சொற்கள் பண்புகளைக் குறிக்கும் சொற்கள் ஆகியவற்றில் உணர்வுக் கலப்பு இல்லை. அன்பு செய்யப்பட்ட பொருளிடத்து அல்லது அந்தப் பொருளைப்பற்றிப் பேசும்போது சொற்கள் பயன்படுகின்றன. அந்தச் சொற்களின் மூலம் உள்நின்ற உணர்வு கொப்பளித்துக்கொண்டு வெளிவருதலைக் காணமுடியும். "தாதாய் மூவேழ் உலகிற்கும் தாயே (446) நானேயோ தவம் செய்தேன்’ (555) என்னை அப்பா அஞ்சல் என்பவர்