பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212-திருவாசகம் சில சிந்தனைகள்-5 பிழைகளையெல்லாம் அடிகளார் அடுக்கிக் கூறினாலும், ஏனோ என்போன்றவர் எண்ணத்தில் அது எவ்வித உணர்வையும் எழுப்பவில்லை. ‘குன்றே அனைய குற்றங்கள் குணமாம் என்றே நீ கொண்டால் என்தான் கெட்டது இரங்கிடாய் (498) ‘என்பிழைக்கே குழைந்து வேசறுவேனை விடுதிகண்டாய்” (154 'அருளா தொழிந்தால் அடியேனை அஞ்சேல் என்பார் யாரிங்கு (385) என்பன போன்ற தொடர்களைப் படிக்கும்போது நாமும் அதில் இணைந்துவிடுகிறோம். ஆனால், என்ன காரணத்தாலோ எண்ணப் பதிகத்தில் அவ்வாறு செய்ய முடியவில்லை. திருவாசகம் முழுவதிலும் எண்ணப் பதிகத்தில் கூறப்பெறும் செய்திகள் குறிப்பாகக்கூட வேறு எங்கும் பேசப்பெறவில்லை. திருவடிதீட்சை பெற்று அடியார்களிடையே அமர்ந்திருந்த சில விநாடிகளில் பிரிவுபற்றிய நினைவு அடிகளார் மனத்தில் தோன்றியிருக்க நியாயமில்லை. எனவே, குருநாதர் பிரியேன்” என்று கூறினார் என்று இந்த ஒரேயொரு இடத்தில் (600) அடிகளார் கூறுவது நமக்கு மயக்கத்தை உண்டாக்குகிறது. எண்ணப் பதிகம் முழுவதுமே இடைச்செருகலோ என்று நினைக்கவும் தோன்றுகிறது. இதுபற்றிய விரிவான ஆராய்ச்சி செய்யப்பெறவேண்டும். 'பிறப்பு அறுப்பாய்’ (602) என்று எதிர்கால வாய்பாட்டில் கூறியதுபற்றி உரையில் குறிப்பிட்டுள்ளோம். பிறப்பை அறுக்கும் செய்தி முன்னரே பலப்பல பாடல்களில் கூறப்பெற்றதேயாயினும் அங்கெல்லாம் இறந்தகால வாய் பாட்டிலேயே கூறியுள்ளார். அதாவது குருநாதரின் திருவடிதீட்சை பெற்ற அந்தக் கணத்திலேயே பிறப்பு அறுபட்டுவிட்டது என்ற துணிவுடன் அப்பாடல்கள் பாடப்பெற்றன. இது அடிகளாரின் தனி முத்திரையாகும். காரணம், பிறப்பை அறுத்துவிட்டான்