பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை_213 என்று பாடும்பொழுதேகூட இந்தப் பிறப்பு (திருவாதவூரராகத் தோன்றிய இந்தப் பிறப்பு இன்னும் இருந்துகொண்டேதான் இருக்கிறது. அப்படி இருந்தும் பிறப்பை அறுத்துவிட்டான் என்று இறந்த கால வாய்பாட்டில் கூறியுள்ளார். அப்படிக் கூறிய அவர் இப்பாடலில் திடீரென்று பிறப்பை அறுப்பாய்’ என்ற எதிர்கால வாய்பாட்டால் கூறுவாரா என்பதை ஆழ்ந்து சிந்தித்தால் இப்பாடலும் பிரியேன்” என்று கூறும் முந்தைய பாடலும் அடிகளார் பாடிய பாடல் இல்லையோ என்ற ஐயம் வலுப்பெறுகிறது. இப்பதிகத்தின் மூன்றாவது பாடலின் இறுதி அடியில் ஒரு புதுமையான கருத்தை வெளிப்படுத்துகிறார். நன்பே அருளாய் என்னுயிர் நாதா நின்னருள் நாணாமே" (60) இந்த அடிக்கு நேராகப் பொருள் செய்வதானால் என் உயிர்க்குத் தலைவனே! அருள் செய்வதற்குத் தகுதியற்றவன் என்று கருதி நாணமடையாமல் (வெட்கப்படாமல்) நல்ல (நன்பே) முறையில் எனக்கு அருள் புரிவாயாக’ என்று கூறவேண்டும். சில பிரதிகளில் நன்பே என்பதற்குப் பதிலாக நண்பே நண்பனே) என்ற பாடபேதம் உள்ளது. அந்தப் பாடத்தைக் கொண்டவர்கள் அடிகளார் இறைவனை ‘நண்பனே, எனக்கு அருள்செய்வாயாக' என்று சொல்வதாகப் பொருள் கூறியுள்ளனர். அதாவது இறைவனை நண்பனே' என்று அழைப்பது ஒன்று; சற்றும் வெட்கப்படாமல் எனக்கு அருள்செய்வாயாக’ என்ற முறையில் அந்த அடிக்குப் பொருள் கூறுவது மற்றொன்று. திருவாசகம் முழுவதிலும் இறைவனைப்பற்றிய பல்வேறு விளிகள் உள்ளன. ஆனாலும் அவை அனைத்தும் ஓர் அடிமை ஆண்டானை விளிக்கும் விளிகளாகவே உள்ளன. இதற்கு முற்றிலும் மாறாக, திடீரென்று இறைவனிடம் சமத்துவம் கொண்டாடி ‘நண்பனே' என்று அழைப்பதும் 'நீ ஒரு சிறிதும் வெட்கப்படாமல் எனக்கு அருள்வாயாக'