பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214--திருவாசகம் சில சிந்தனைகள்-5 என்று பேசுவதும் இந்த அடியில் வந்துள்ளன. திருவாசகத்தைப் படிப்பவர்கள் நாயினும் கடையேன்” என்று ஓயாமல் தம்மைக் கூறிக்கொள்ளும் ஒருவர் திடீரென்று நண்பனே!’ என்று அழைப்பாரா? நீ வெட்கப்படாமல் எனக்கு அருள் புரிவாயாக’ என்று கூறுவாரா என்பதைச் சிந்தித்தால், இப்பாடலும் முந்தைய பாடலோடு சேர்த்து இடைச் செருகலோ என்று நினைக்க இடம் தருகிறது. யாத்திரைப்பத்து திருவாசகத்தில் இதுவரை காணப்பெறும் பாடல்களைப் படித்துப் பார்த்தால், இவ்வுலகிடை பருவுடம்புடன் வாழும் அடியார்களை அடிகளார் நினைத்துப் பேசியதாகத் தெரியவில்லை. அடியார்கள் என்று குறிப்பிடும் இடங்களிலெல்லாம், திருப்பெருந்துறையில் குருநாதர் முன்னர் அமர்ந்திருந்த அடியார்களையே குறிப்பிடுகின்றார் என்பது தெளிவாகத் தெரியும். அடியாரெல்லாம் தாள் சேர்ந்தார்', 'இச்சைக்கு ஆனார் எல்லாரும் வந்து உன் தாள் சேர்ந்தார் என்று கூறிவிட்டு, அடியார் நடுவுள் இருக்கும் அருளைப்புரியாய்” என்று பாடுவது திருப்பெருந்துறை அடியார் கூட்டத்தையே என்பது நன்கு விளங்கும். இந்த முறைக்கு முற்றிலும் மாறாக யாத்திரைப் பத்து அமைந்துள்ளது. சிவபுரம் செல்ல உறுதி கொண்டவர்கள் அனைவரும் கூட்டமாக வாருங்கள். கயிலை புக இதுவே தருணம்’ என்று யாரைப் பார்த்துப் பேசுகிறார்? இதுவரை அவர் குறிப்பிட்ட அடியார்கள் முன்னரே சிவபுரத்தில் இருப்பவர்கள்; குருநாதரோடு இறங்கிவந்து, குருநாதரோடே திரும்பிச் சென்றுவிட்டவர்கள். எப்படியாவது அந்த அடியாருடன் சேரவேண்டும், அவர்களிடையே இருக்கவேண்டும், இதற்குக் குருநாதர்