பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 திருவாசகம் சில சிந்தனைகள்-5 என்ன கவசம் அணியவேண்டும்; என்ன ஆயுதங்களை எடுத்துச்செல்லவேண்டும் என்றெல்லாம் சிந்தித்து, அவர்களுக்குத் தந்துவிட்டு, புறப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது; புறப்படுங்கள்’ என்று சொல்வதுபோல அடிகளார். இப்பாடலில் உலகத்தவரை அழைக்கின்றார். இந்த அழைப்பு, பொதுவாக எல்லோரையும் அழைப்பதுபோலத் தோன்றினாலும் ஆழ்ந்து நோக்கினால், புறப்படவேண்டியவர்கட்குச் சில அடிப்படைத் தேவைகளை அடிகளார் இப்பாடலில் குறிக்கிறார் என்பது தெரியும். "சிறியோம் என்ற சொல்லினால் மானிடச் சாதி முழுவதையும் குறிப்பிடுகிறார் என்பதில் ஐயமில்லை. அந்தக் கூட்டத்தில் ஆவா எனப்பட்டீர் என்று ஒரு குறிப்பிட்ட தொகுதியைப் பிரிக்கின்றார். அப்படி ஆவா எனப்படுவதற்குச் சில அடிப்படைத் தகுதிகளையும் நிகழ்ச்சிகளையும் குறிக்கின்றார். தலைவனாக உள்ள இறைவன் எல்லோருடைய உள்ளத்திலும் உறைகின்றான் என்பதில் ஐயமில்லை. ஆனால், அஞ்ஞானம், ஆணவம் முதலிய திரைகள் அவனை மறைக்கின்றன. கூட்டத்தில் பெரும்பகுதியானவர்கள் இந்தத் திரையை நீக்காதவர்கள். ஒரு சிலர் தாங்கள் சிறியவர்கள் என்பதை உணர்ந்து மனத்தில் உள்ள ஆணவம் முதலிய குப்பைகளையெல்லாம் அகற்றி, உள்ளத்தைத் துய்மையாக வைத்திருத்தலின், அவர்கள் உள்ளத்தில் உணர்வு வடிவாக உள்ளே கலந்து நிற்கின்றான். அப்படி அவன் உட்கலத்தற்குக் காரணம் ஆணவம் முதலியவற்றை நீக்குதல் ஆகிய செயல்மட்டும் அன்று இவர்களுடைய முயற்சி தேவைதான், மனக் குப்பைகளை அகற்றுவதும் உள்ளத்தைத் திறந்துவைப்பதும் இந்த ஒரு சிலருடைய முயற்சி என்பதில் ஐயமில்லை. இந்த முயற்சியைச் செய்துவிட்டால் உள்ளத்தை உருக்கும் பெருமான் உடனே வந்துவிடுவான் என்று நினைப்பது தவறு. அப்படியானால் என்ன செய்தால் அவன் வருவான்? அதற்கு விடைகூறுமுகமாகத் தனது வெள்ளக்கருணையினால்