பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை.--217 உணர்வதுவாய் உள்புகுந்து நிறைகின்றான் என்று குறிக்கின்றார். அவன் உள்ளே நிறைந்துவிட்ட காரணத்தால் இந்த ஒருசிலர் அவனுக்கு ஆட்பட்டவர்களாய் ஆகிவிடுகின்றனர். குறிப்பிட்ட போருக்கு, குறிப்பிட்ட 2–65) L, படைக்கலங்கள் முதலியவற்றைத் தேர்ந்தெடுப்பதுபோல் இங்கேயும் சில செயல்கள் நடைபெறுகின்றன. துய்மைப்படுத்தப்பட்ட மனம், சித்தம் என்பவை அடிப்படைத் தேவை; இது முதல்நிலை. இப்பொழுது, பெருமான் தன் வெள்ளக் கருணையினால் இவர்கள் உள்ளத்தே புகுந்தான்; இது இரண்டாவது நிலை. புகுந்தவன் உணர்வதுவாய் நின்று உள்ளத்தை உருக்கும் செயலைச் செய்கின்றான்; இது மூன்றாவது நிலை. இந்த மூன்றாவது நிலையை அடைந்தவர்களே அவருடைய கருணைக்கு ஆட்பட்டவர்கள் என்று சொல்லவேண்டும். இவர்களைத்தான் அடிகளார் பொய்விட்டு உடையான் கழல்புக ஒருப்படுமின்; காலம் வந்ததுகாண்’ என்று அழைக்கின்றார். பல்வேறு வகைப்பட்ட மக்களிலிருந்து வடித்தெடுத்து, ஆட்பட்டவர்கள் என்று பெயரும் சூட்டப்பெற்று, ஒரு தொகுதியாகத் தனியே நிற்கும் இவர்கள் ஒருபுறம். இவர்கள் அனைவரையும் ஒரேநிலையில் உள்ளவர்கள் என்று கூறுவதற்கில்லை. உள்ளத் துய்மையோடு இறைவனை உள்நிறுத்திக் கொண்டவர்கள்கூட சில நேரங்களில் வழுக்கி விழுந்து விடுகின்றனர். காரணம், சிவபுர யாத்திரை மிக நீண்ட பயணமாகும். இந்த நீண்ட பயணத்தில் இடைக்கண் முரிந்தவர் பலருண்டு என்பதை நாமறிவோம். ஏனைய வாழ்க்கையில் முன்னேறிச் செல்பவர்கள், பல காரணங்களால், முன்னேற்றம் தடைப் பட்டுக் கீழே விழுவதுபோல் சிவபுர யாத்திரையிலும் இதுநடைபெறுகிறது. அதை இப்பதிகத்தின் பின்னர் வரும் பாடல்களில் அடிகளார் வரிசைப்படுத்திக்காட்டுகிறார்.