பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218-திருவாசகம் சில சிந்தனைகள்-5 உலகியல் முயற்சிகளில்கூட எதிர்பார்த்த பயன், எதிர் பார்த்த நேரத்தில் கிட்டாதபொழுது மனம் தளர்வடைந்து முயற்சியை விட்டுவிடுபவர் பலர். இத்தளர்ச்சிக்குக் காரணம் அவர்கள் முயற்சிக்கு இடையே தோன்றும் இடையூறுகளே ஆகும். இதனையே, 606வது பாடலில் சிவபுர யாத்திரை செல்பவர்களுக்கு வரும் இடையூறுகளை வரிசைப்படுத்துகின்றார் அடிகளார். இந்த அடியார்கள் இந்த உலகில் பொறி புலன்களோடு கூடிய பூத உடம்புடன் வாழ்பவர்கள். இந்தப் பொறி புலன்கள் எத்தனை வலிமையானவை, மறைந்திருந்து தாக்கும் பேராற்றல் வாய்ந்தவை என்பதைக் காழிப்பிள்ளையார்முதல், நம்மாழ்வார்வரை i_16t) அருளாளர்களும் பாடிச் சென்றுள்ளனர். சிவபுர யாத்திரையில் செல்லத் தொடங்கியவர்கட்குத் தாம் பணிவதுபோல, இப்பொறி புலன்கள் தொடக்கத்தில் பணிபுரிகின்றன. 'இவை அடங்கிவிட்டன; இனி இவற்றால் தொல்லை இல்லை’ என்ற நினைவு தோன்றியவுடன் தம்முடைய ஆன்மிகப் பயணத்தை மனத்தென்புடன் கொண்டுசெலுத்தலாம் என்று நினைக்கின்றனர் அடியார்கள். - ஆனால், இந்தப் பொறி புலன்கள் எதிர்பாராத நேரத்தில் அப்படியே கவிழ்த்துவிடும். ஆகவேதான், இத்தகைய யாத்திரையில் அனுபவப்பட்ட அடிகளார், புறப்படத் தயராகுங்கள் என்று கூறியவுடன் தாம் தேர்ந்தெடுத்துக் கூட்டிய அடியார் கூட்டத்திற்குச் சில எச்சரிக்கைகளை விடுக்கின்றார். முதலாவது எச்சரிக்கை: 'நீவிர் புலன்களில் புகவே வேண்டா என்பதாகும். நாம் புகாவிட்டாலும், சரியானபடி புலன்களுக்குப் பணிகளைத் தராவிட்டால் அவை தாறுமாறாகச் சென்று கவிழ்த்துவிடும். ஆகவே, புலன்களில் புகவேண்டா என்று முதல் எச்சரிக்கை விடுத்த அடிகளார், புயங்கப்பெருமான் பூங்கழல்கள் மிகவே நினைமின் என்று புலன்களில் புகாமல் இருக்க வழியைக் கூறுகிறார். புயங்கப்பெருமான் பொன்னடிகளை ஓயாது