பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை_219 நினைக்கும் பணியை மனத்திற்கு அளித்துவிட்டால், மனத்தின்வழி தொழிற்படும் புலன்கள் செயலற்றுவிடும். இப்பணி இருபத்துநான்கு மணிநேரமும் செய்யப்பட வேண்டும் என்பத்ை அறிவுறுத்தவே நினைமின் என்றுமட்டும் கூறாமல், மிகவே நினைமின் என்று கூறுகிறார். - எவ்வளவுதான் இறைவன் திருவடிகளை நினைக்கும் பணியை மனத்திற்குத் தந்தாலும் இந்த அடியார்கள் பருவுடலுடன் இந்த உலகத்தில்தானே வாழ்கிறார்கள்? எனவே, உலகிடை இயல்பாக உள்ள நிகழ்ச்சிகள், செயல்கள், மக்கள் முதலியவற்றால் வரும் தாக்கங்கள் இவர்களை விட்டு வைக்குமா? இவற்றிற்கு ஒரு பொதுப்பெயராக 'மிக்கவெல்லாம்’ என்ற தொடரைப் பயன்படுத்துகிறார் அடிகளார். இவர்கள் வேண்டாவென்றாலும், அவைகள் இவர்களை சுலபமாக விடுவதில்லை. அப்படியானால் இவற்றை என்ன செய்வது? அடுத்து நிற்பன மூன்று சொற்கள். மிகமிக ஆழமான பொருளுடையவை அவை. வேண்டா போகவிடுமின்கள்’ என்பவை அச்சொற்கள். மிக்க என்ற சொல்லால் குறிப்பிடப்பெற்ற மேலேகாட்டிய மூன்று தாக்கங்களையும் வேண்டா என்று ஒதுக்கிவிட்டால் போதுமே! வேண்டா என்று கூறிவிட்டு,"போகவிடுமின்கள்’ என்று ஏன் கூறவேண்டும்? வேண்டா என்று கூறிவிட்டு அப்பொருள் பக்கத்தில் இருக்குமாறு இடங்கொடுத்தால் என்ன நிகழும் என்பதைத் தமிழ்நாட்டில் வழங்கும் கோவணத்தைக் காப்பாற்றக் குடும்பஸ்தன் ஆயினான்’ என்ற பழமொழி நன்கு விளக்குகிறது. இந்த நுட்பத்தை அறிந்த அடிகளார் அதனை அறிவுறுத்தவே, ‘மிக்கவெல்லாம் வேண்டா' என்று கூறுவதோடு அமையாமல், போகவிடுமின்கள் என்றும் கூறுகின்றார். முதல்பாட்டில் கூறப்ப்ெற்ற அடியார்களை ஒத்தவர்கள் அல்லர் இவர்கள். அக்கூட்டத்திடை இவர்களும்