பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 உதிருவாசகம் சில சிந்தனைகள்-5 காணப்பெற்றாலும் இவர்கள் தொடக்க நிலையில் உள்ள சாதகர்கள் ஆவார்கள். அதனால்தான் பொறி, புலன்களோடு வாழும் இவர்கள் சாதகஞ் செய்யும்பொழுது எதிர்ப்படும் பொறி, புல அபாயங்களை எடுத்துக்கூறி அவற்றைப் போக்குதற்கு வழியும் கூறினார். அடிகளார் கூறிய வழியைப் பின்பற்றிச் செல்லும் சாதகர்க்கு உடனே கைமேல் பலன் கிட்டிவிடுவதில்லை. மிக நீண்ட யாத்திரையில் எதிர்பார்த்தது உடனே கிட்டாதபோது தளர்ச்சி தோன்றுவது இயற்கை அத்தகைய தளர்ச்சி தோன்றும் பொழுதெல்லாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பின்னிரண்டு அடிகளில் குறிப்பிடுகின்றார். "சாதகர்களே! தளர்ச்சி அடையவேண்டாம். தளர்ச்சி தோன்றும் பொழுதெல்லாம் ஒன்றை நினைந்து பாருங்கள். எங்கோ சிவபுரத்தில் இருக்கும் ஒருவன் நம்பாற் கொண்ட கருணை காரணமாகக் கீழ் இறங்கி வந்து இந்தப் பூமியில் நம் போன்றவர்களை ஆண்டுகொண்ட செய்தியை நினைத்துக் கொள்வீர்களேயானால் உங்களுடைய தளர்ச்சி போய்விடும் என்கிறார் அடிகளார். அனுபவ ஞானியாகிய அடிகளார் கூறுகின்ற பாடல் ஆன்மிக வழிச்செல்லும் சாதகர்களுக்கு இணையற்ற வழிகாட்டியாகும். அடுத்துவரும் 07ஆவது பாடலில், சாதகர்கள் செய்யவேண்டிய இரண்டாவது பணி பேசப்பெறுகின்றது. பொறி, புலன்களைத் திசைதிருப்பிச் செலுத்தும் பணி நடைபெறுகையில் ‘மிக்க’ என்ற சொல்லால் குறிப்பிடப்பெற்ற தாக்கம்பற்றிப் பேசுகிறார் அடிகளார். "சாதகனே! உன்னைச் சுற்றியுள்ள உறவினர்கள் என்பவர்கள் இந்த உடம்பிற்குத்தான் உறவினர்களே தவிர உனக்கு உறவினர்கள் அல்லர். அப்படியானால், உனக்கு யார் சுற்றம் என்று கேட்கிறாயா? நீதான் உனக்குச் சுற்றம். உன் உள்ளம் என்ன வழியை வகுக்கின்றதோ அதுவே உனக்குரிய வழி. இப்பொழுது உன்னைச் சுற்றி உள்ள பொருள்க்ள் என்பவற்றிடத்து உன்னையும் அறியாமல்