பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை_221 - பற்றுச் செல்லும்; அதற்குப் பெயர்தான் பாசம் என்பது. இந்தப் பாசம் தோன்றும்பொழுது, 'நான் யார் எனது என்று சொல்லப்படும் இப்பொருள்களுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு என்ன, இது என்ன மாயை' என்று சிந்திக்கத் தொடங்கினால் அவற்றினின்று நீ விடுபடுவாய். 'பொய்யானது இந்த உடம்பு. பொய்யானவை இந்தப் பொறி, புலன்கள். எனது என்று சொல்லப்படும் இந்த உடைமைகளும் பொய். தொண்டரோடு வந்து ஆண்ட அவன் கருணையை இந்த உறுதிப்பாட்டோடு, ஓயாது நினைப்பாயேயானால் நீ முன்னேற முடியும்’ என்று கூறுவதன்மூலம் இரண்டாவதாகத் தோன்றும் ஆபத்தைக் கடக்க வழிகறுகின்றார். * . . அடுத்த பாட்டில் (608) சாதகனுடைய முன்னேற்ற வழியில் தோன்றும் மற்றோர் ஆபத்தை விரித்துக் கூறுகிறார். ‘அடியார் ஆனிர் எல்லீரும் அகல விடுமின் விளையாட்டை என்பதுதான் அந்தப் புதிய ஆபத்து. அடியார்கள் ஆகிவிட்ட பிறகுங்கூட பொறி புலன்களோடு கூடிய இந்த உடம்புடன் இருத்தலால் சிலவற்றைக் காரண, காரியமில்லாமல் விளையாட்டாகச் செய்யத் தொடங்கி இறுதியாக இதில் அகப்பட்டுக்கொள்ளும் நிலைமை தோன்றிவிடும். இப்பொழுது நீங்கள் ஒரு எல்லைக்கு வந்து விட்டீர்கள்; ஆதலால் இனி உங்கட்கென்று எதுவுமில்லை. ஆகவே, அவனுடைய திருக்குறிப்பு என்ன என்பதை எதிர்பார்த்து, ஒரே மனநிலையில் இருக்கப் பழகுங்கள்’ என்கிறார். தவறிக்கூட இந்த விளையாட்டில் இறங்காதிருக்க வேண்டுமானால், அதற்குரிய ஒரே வழி இந்த உடம்பைப் போக்குவதுதான். அதனைத்தான் அடிகளார் இங்கே குறிப்பிடுகிறார். - பொறி புலன்களில் மனம் செல்லாமல் ஒருநிலைப்படுத்தி இறைநினைவு தவிர எஞ்சிய எல்லாவற்றையும் வேண்ட்ா என்று ஒதுக்கி, அவை