பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222-9-திருவாசகம்-சில சிந்தனைகள்-5 நீங்குமாறு செய்துவிட்டுக் கடைசிப் படிக்கு வருகின்றவரையில் இந்த உடல் தேவைப்படுகின்றது. அவற்றையெல்லாம் செய்துமுடித்த சாதகன் இப்பொழுது உடலைத் துறக்கத் தயாராக உள்ளான். சாதகனுக்கு அதை நினைவூட்டவே 'செடிசேருடலைச் செலநீக்கிச் சிவலோகத்தே நமைவைப்பான்’ என்று கூறுகிறார். 605ஆம் பாடலில் மிக உயர்ந்த நிலையில் உள்ள அருளாளர்களுக்குச் சில வழிமுறைகளைக் கூறிய அடிகளார் 606, 607, 608ஆம் பாடல்களில் ஆன்மிகத் துறையில் புக விரும்பும் சாதகர்களுக்கு முன்னேறும் வழிமுறைகளையும், இடையே எதிர்ப் படும் இன்னல்களையும் எடுத்துக்கூறி முடிவான நிலைக்கு அவர்கள் வருகின்ற நிலையில் செய்யப்பட வேண்டியவற்றை வரிசைப்படுத்திக் கூறிவிட்டார். 609 ஆவது பாடலில் அடிகளாரின் கருணை நிறைந்த மனம் எவ்வளவு விரிந்துள்ளது என்பதைக் காணமுடியும். இந்தப்படிகளையெல்லாம் வாழ்ந்து கடந்து சென்றவராதலின் தம் அனுபவத்தை யாத்திரைப்பத்தில் சாதகர்கள், சாதாரணப் பொதுமக்கள் ஆகிய இரு சாராருக்கும் எடுத்துக்கூறுகிறார். ஆற்றகில்லேன் அடியேன் அரசே அவனிதலத்து ஐம்புலனாய சேற்றில் அழுந்தாச் சிந்தை (439) வேண்டும் என்று பாடிய நிலை மாறிவிட்டது. இந்த உலகத்தையோ பொறி புலன்களையோ எந்த மாயையையோ கண்டு அஞ்சும் நிலை கடந்துவிட்டது. தில்லைக்கூத்தன் திருவடி, மிக அண்மையில் நின்று தம்மை அழைக்கின்றது என்பதை உள்ளூர உணர்ந்த அடிகளார் அந்தத் திருவடிப் பேற்றை அடையுமுன்னர்த் தாம் பிறந்து வளர்ந்த இந்த மானுட சமூதாயத்திற்குச் சில அறவுரைகள்ைப் பகர விழைகின்றார். மானுட சமுதாயம் மூன்று வகையாகக் காட்சியளிக்கின்றது. அருளாளர் நிலையில்